பதிவு செய்த நாள்
28 அக்2020
21:22

புதுடில்லி :இந்தியாவின் சர்க்கரை நுகர்வு குறித்த, ‘கட்டுக்கதைகள்’ மற்றும் சந்தேகங்களை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய உணவு துறை செயலர் சுதான்ஷு பாண்டே கூறியதாவது:எந்த ஒரு விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல், சர்க்கரை மற்றும் சர்க்கரை நுகர்வு பற்றி நிறைய
கட்டுக்கதைகள் வருகின்றன. இந்த தவறான தகவல்கள், உண்மைத் தகவல்களை விட
வேகமாக பரப்பப்படுகின்றன.
தவறான புரிதல்
எனவே, சர்க்கரை குறித்த விஞ்ஞானரீதியிலான தகவல்களை வெளியே கொண்டுவர வேண்டும். அது, மக்களுக்கு சரியானமுடிவுகளை எடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.மேலும், இந்தியாவின் சர்க்கரை நுகர்வு குறித்து, வெளிநாடுகளில் தவறான புரிதல்களும் இருக்கின்றன. இந்திய சர்க்கரை, பிரேசில் அல்லது தாய்லாந்து சர்க்கரை போன்று நல்ல சர்க்கரையாக இல்லை என்ற கருத்தும் இருக்கிறது.
இந்தியா, உலகின் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வு நாடாக இருந்தாலும், தனி நபர் நுகர்வு, பல நாடுகளை விட மிகவும் குறைவாகவே இருக்கிறது.நாட்டின் தனி நபர் சர்க்கரை நுகர்வு, கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த மாற்றமும்இல்லாமல், 19 கிலோவாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
சரியான தகவல்
இது, உலக சராசரியான, 23.50 கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில், தனி நபர் சர்க்கரை நுகர்வு, 60 கிலோவாக இருக்கிறது.நாட்டின், ஓராண்டுக்கான சர்க்கரை நுகர்வு, 2.5 – 2.6 கோடி டன்னாக உள்ளது. அதே சமயம் உற்பத்தி, 2.75 கோடி டன்னாக
செப்டம்பருடன் முடிவடைந்த ஓராண்டில் உள்ளது. உற்பத்தி அதிகமிருப்பினும், நுகர்வு அதைவிட குறைவாகவே இருக்கிறது.
எனவே, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சமூக ஊடகங்கள் ஆகியவை, மக்களுக்கு
அறிவியல் பூர்வமான, சரியான தகவல்களை வழங்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|