பதிவு செய்த நாள்
28 அக்2020
21:24

புதுடில்லி :எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போய்விடும் என தெரிகிறது.
முதலில், நிறுவனத்தின் மதிப்பை அறிந்து கொள்வது உள்ளிட்ட பல பணிகளை முடிக்க அரசு விரும்புவதால், பங்கு வெளியீடு தள்ளிப்போகும் என்கிறார்கள்.இது குறித்து உயரதிகாரி
ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, எல்.ஐ.சி.,யின், ‘எம்பெடட்’ மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து அறிந்து கொள்ள விரும்புகிறது.
இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகள், நான்கு கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.அடுத்து, எல்.ஐ.சி.,
சட்டங்களில் பாராளுமன்ற திருத்தங்கள், எல்.ஐ.சி.,க்கான மென்பொருள் மாற்றங்கள்,
நிறுவனத்தின் எதிர்கால லாபங்களின் தற்போதைய மதிப்பு மற்றும் சரிசெய்யப்பட்ட நிகர சொத்து மதிப்பு ஆகியவற்றை கொண்ட, ‘எம்பெடட்’ மதிப்பை அறிவது ஆகிய பணிகளை மேற்கொள்ளவேண்டியதிருக்கும்.
மேலும், எல்.ஐ.சி., அதன் வசம் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கெடுக்க வேண்டும். இவை எல்லாம் நிறைவுபெற்ற பிறகே, புதிய பங்குகள் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|