பதிவு செய்த நாள்
28 அக்2020
21:25

புதுடில்லி:அஞ்சல் துறை மூலமாக நடைபெறும் ஏற்றுமதி தொடர்பான சுங்க தகவல்களை, பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில், இந்திய தபால் துறையும், அமெரிக்க அஞ்சல் சேவையும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, அனுப்பப்படும் பொருள் குறித்த தரவுகளை, முன்கூட்டியே மின்னணு தொழில்நுட்பம் மூலமாக இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று, உடனே தெரியப்படுத்தி விட முடியும்.இதன் காரணமாக, சுங்க அனுமதியை முன்கூட்டியே பெறுவது எளிதாகிவிடும். இது, தபால் துறை சேவையை மேம்படுத்தும் விதமாக இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்கா தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் நாடாக இருக்கிறது. கிட்டத்தட்ட, 17 சதவீதம் ஆகும். இது, அஞ்சல் துறை மூலமான ஏற்றுமதியிலும்பிரதிபலிக்கிறது.கடந்த ஆண்டில், ‘இ.எம்.எஸ்.,’ எனும், ‘எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ்’ மூலமாக அனுப்பப்பட்டவற்றில், 20 சதவீத மும், கடிதங்கள், சிறிய பாக்கெட்டுகள் ஆகியவற்றின் மூலமாக அனுப்பப்பட்டவற்றில், 30 சதவீதமும் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டவை ஆகும்.
இப்போதைய ஒப்பந்தத்தினால், அஞ்சல் வழி மூலமான, சிறிய மற்றும் பெரிய
ஏற்றுமதியாளர்கள் மிக எளிதாக ஏற்றுமதியை மேற்கொள்ள முடியும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|