பதிவு செய்த நாள்
28 அக்2020
21:29

புதுடில்லி, :ஓட்டல் மற்றும் உணவகங்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, எப்.எச்.ஆர்.ஏ.ஐ., தங்கள் துறைக்கென தனியே, நிதி ஊக்கச் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்ற
கோரிக்கையைமுன்வைத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பின் துணைத் தலைவர் குர்பாக்ஸி சிங் கோலி கூறியதாவது: கொரோனா பரவலின் முதல் ஏழு மாதங்களில், எந்த வருவாயும் இல்லை. வேலையிழப்பு, திவால் ஆகியவை இத்துறையை முற்றிலும் அழித்துவிட்டன. அன்னிய செலாவணி
வருவாய் என்பது சுத்தமாக இல்லை. உள்நாட்டு வணிகம் மூலமாக வருவாய்,
10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.
தளர்வுகளுக்குப் பின், அனைத்து துறைகளும் இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இத்துறை மட்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலையில், 25 சதவீதத்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.எனவே, இத்துறைக்கு தனியாக ஊக்கச் சலுகைகள் தேவைப்படுகிறது. கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்கு, முழுமையான வட்டி தள்ளுபடியை அறிவிக்க வேண்டும். மூலதன தேவைகளுக்கு, குறைந்தபட்ச வட்டியில் கடன் வழங்குவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|