டிரம்பா, பிடனா? இந்தியாவுக்கு யார் சாதகம்? டிரம்பா, பிடனா? இந்தியாவுக்கு யார் சாதகம்? ...  அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு கண்டது அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு கண்டது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி டெபாசிட் - எப்.எஸ்.டி.ஆர்.: சாதக, பாதகங்கள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2020
10:09

பாராளுமன்றத்தில், கூடிய விரைவில், ‘நிதி அமைப்புகள் மேம்பாடு மற்றும் ஒழுங்கமைவு மசோதா’ தாக்கல் செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு வங்கி, நிதி நிறுவனம், செயல்படமுடியாமல் போகும் நிலை வந்தால், அதை மீட்க, அரசிடம் இருக்கும், மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தாமல், பிரச்னையில் சிக்கும் குறிப்பிட்ட வங்கியின் பணம் (டெபாசிட் /சேமிப்பு), சொத்துக்கள், பங்குகளை கொண்டே சமாளிப்பது தான் அதன் நோக்கம்.

புதிய மசோதா சட்டமானால், பிரச்னைக்குரிய வங்கிக்கு ‘ரிசொல்யூசன் அத்தாரிட்டி (ஆர்.ஏ.)’ என்ற தீர்வு அமைப்பு நியமிக்கப்படும். வாடிக்கையாளர்களின் டெபாசிட் காலத்தை குறைப்பது அல்லது நீட்டிப்பது. டெபாசிட் மீதான வட்டியை குறைப்பது. டெபாசிட்களை பங்குகளாக மாற்றுவது போன்றவற்றுக்கான அதிகாரம், ஒரு ‘ஆர்.ஏ.’விடம் தான் இருக்கும்.

கவலை தேவையில்லை
புதிய மசோதா/சட்டம், எல்லா வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீதும் பாயாது. எங்கே, எப்போது பிரச்னை உருவாகிறதோ? அதற்கு தீர்வு காண்பதற்கு மட்டுமே உதவும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள எல்லோரும் இதுகுறித்து கவலை கொள்ள தேவையில்லை. புதிய மசோதா, பார்லிமென்டில் தாக்கலாகும்போது தான் தெரியவரும். இருக்கும் செய்திகளை வைத்து எப்.எஸ்.டி.ஆர். மசோதாவின் சாதக, பாதக அம்சங்களை அலசுவோம்.

சாதக அம்சங்கள்
* வங்கிகளில் ஏற்பட்ட சிறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு கூட, பல்வேறு அரசு, சட்ட அமைப்புகள் முன்பு நீண்ட காலம் எடுத்து கொண்டன. அதுவரை குறிப்பிட்ட வங்கியில் டெபாசிட், சேமித்தவர்கள், தங்கள் பணத்தை எடுக்க, காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது; இனி அப்படி இருக்காது.
* புதிய மசோதா, ‘ஆர்.ஏ.,’ என்ற புதிய அதிகார அமைப்பின் வாயிலாக, ஓராண்டு, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் வங்கிகளின் பிரச்னை தீர்க்கப்படும்.

* டெபாசிட்கள் மீது இன்சூரன்ஸ் செய்யப்படுவதால், குறிப்பிட்ட தொகை வரை, டெபாசிட்தாரர்கள் திரும்ப பெற முடியும்.

பாதக அம்சங்கள்
* பெரும்பாலான மக்கள், வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். அது, 6 சதவீதம் அளவுக்கு, மிக குறைந்த வட்டியாக இருந்தாலும் கூட, திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு டெபாசிட் செய்கிறார்கள். குறிப்பாக, சீனியர் சிட்டிசன்கள், அவர்கள் வாழ்க்கைக்காக வங்கிகளில் வைத்திருக்கும் டெபாசிட்டுக்கள் என்பதால், வங்கிகள் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகும்.

* பிரச்னை என்று வந்தால், டெபாசிட்டில் கை வைப்பார்கள் என்று அறிவித்தால், வங்கிகளை நாடி செல்ல மக்கள் தயங்குவர்.

அச்சம் தவிர்க்கணும்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், வங்கிகள், நிதி அமைப்புகள் திவாலாவது அவ்வப்போது நடந்திருக்கின்றன. இந்தியாவில் அப்படி அல்ல. ஒரு சில சம்பவங்கள் தவிர, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை, பிரச்னைகளின் போது, மத்திய அரசுகள் காப்பாற்றியே வந்திருக்கின்றன. வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கைளில், அரசு, அதிகார மையங்களின் தலையீடு இல்லாவிட்டால், பெரிய வராக்கடன்கள் உருவாகாது. நிரவ்மோடி, விஜய் மல்லையாக்கள் உருவாகவும் மாட்டார்கள்.நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும், ரிசர்வ் வங்கியின் ஒரு பணி தான். அப்படி இருக்கும்போது, ‘ஆர்.ஏ.’ என்று, புது அதிகார அமைப்பு தனியாக எதற்கு? என்ற கேள்வி, மக்களிடம் எழுந்துள்ளது. புதிய மசோதா காலத்தின் அவசியம். ஆனால், மக்களின் அச்சம் தீர்ப்பது, அதைவிட அவசியம். ஆகவே, மசோதா அறிமுகப்படுத்துவதற்கு முன்போ, பின்போ, மக்களின் கருத்து அறிவதும், அவர்களுக்கு எளிமையாக, அவர்கள் மொழியில் விளக்குவதும், வதந்திகள் பரவுவதையும், பதற்றம் உருவாவதையும் தணிக்கும்.

பிரச்னைகள் நல்லது
மகாராஷ்டிராவில் இயங்கிய ‘பஞ்சாப் அண்ட் மகாராஷ்ட்ரா’ கூட்டுறவு வங்கியில் பிரச்னை வந்தபோது, அரசு சார்ந்த துறைகள் பல, தங்கள் பிரச்னைகளை முடிக்கவே நினைத்தார்கள். இதுபோன்ற பிரச்னைகளின் போது, பல்வேறு துறைகள் தலையிடும் நிலை வரும். இதனால், பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்காது. தெளிவான வழிகாட்டும் நெறிமுறைகள் இருந்தால், பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காணமுடியும். முதியோர் பலர், தங்கள் ஓய்வு கால பலன்களை, வங்கிகளில் டெபாசிட் செய்து தான் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருப்பதற்காகவே, ஓராண்டுக்குள் தீர்வு எட்ட வேண்டும் என, மசோதா சொல்வதாக தெரிகிறது.

ஏன் வருகிறது எப்.எஸ்.டி.ஆர்.?
கடந்த, 2008ல், உலகலாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது அமெரிக்காவும் ஆட்டம் கண்டது. சில தனியார் வங்கிகள் வீதிக்கு வந்தன. பொருளாதார பின்புலம் அறியாமல், வந்தவர்களுக்கெல்லாம் வீட்டுக்கடனை, வங்கிகள் வாரி வழங்கியதே காரணம். கடன் பெற்றவர்களால், தவணை செலுத்த முடியவில்லை. இதனால், வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. 2013ல் இதேபோன்ற நிலையை, சைப்ரஸ் நாட்டு வங்கிகளும் சந்தித்தன. இரு வாரங்களாக வங்கிகள் இயங்கவில்லை.இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, டெபாசிட்தாரர்களை காப்பாற்ற, வங்கிகளை மீட்க, புதிய சட்டங்களை அந்தந்த நாடுகள் இயற்ற வேண்டும் என்று, ‘ஜி-20’ நாடுகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. ‘ஜி-20’ நாடுகளில் ஒன்றான இந்தியாவும், அதை பின்பற்றி, திவால் வங்கிகளை மீட்க முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கையே, எப்.எஸ்.டி.ஆர்., மசோதாவை வடிவமைத்து வருகிறது, என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கேள்விகள் ஆயிரம்
இந்தியாவில் ‘யெஸ் பேங்க்’ உட்பட 2 வங்கிகள் தான் சிக்கலை சந்தித்தன. சரிவை சந்தித்த ‘குளோபல் டிரஸ்ட் பேங்ங், ‘ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்’ உடன் இணைக்கப்பட்டது. ‘யுனைட்டட் வெஸ்டர்ன் பேங்க்’, ‘ஐ.டி.பி.ஐ.,’ வங்கியுடன் இணைக்கப்பட்டது. புதிய மசோதா வந்தால், வங்கிகள் இணைப்பு இருக்குமா தெரியவில்லை. ‘ரிஸ்க்’ அடிப்படையில், டெபாசிட்களுக்கான இன்சூரன்ஸ் நிர்ணயிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுவதால், அதிக பிரீமியம் செலுத்தும் நிலை வந்தால், கூட்டுறவு வங்கிகளின் வருவாய் சரியும். மற்ற வங்கிகளை விட, டெபாசிட்கள் மீது, கூட்டுறவு வங்கிகள், ஒரு சில சதவீதம் அதிக வட்டி கொடுத்த நிலை மாறும். இதனால் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள், வேறு வங்கியை நாடுவார்கள். கூட்டுறவு வங்கிகளின் நோக்கம் சிதையும். புதிய மசோதா கூட்டுறவு வங்கிகளை கைதுாக்கிவிடுமா? காலை வாருமா என்பதே, மக்கள் முன் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்களின் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: Karthi@gmktax.com

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் நவம்பர் 03,2020
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)