பதிவு செய்த நாள்
10 நவ2020
22:03

புதுடில்லி:நடப்பு நவம்பர் மாதத்தில், கடந்த, 7ம் தேதி வரையிலான காலத்தில், ஏற்றுமதி உயர்வைக் கண்டுள்ளது. இது, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை காண்பிப்பதாக இருக்கிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில், ஏற்றுமதி, 22.47 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட, 49 ஆயிரத்து, 950 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி இவ்வாரத்தில் எட்டப்பட்டுள்ளது.மருந்து பொருட்கள், நவரத்தினம் மற்றும்ஆபரணங்கள், பொறியியல் ஆகிய துறைகளின் மூலமான ஏற்றுமதி அதிகரித்தது இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு, இதே நவம்பர் முதல் வாரத்தில், ஏற்றுமதி மதிப்பு , 40 ஆயிரத்து, 774 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மருந்து பொருட்கள், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி முறையே, 32 சதவீதம், மற்றும் 88.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 16.7 சதவீதம்
அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில் அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய
நாடுகளுக்கான ஏற்றுமதி முறையே, 53.91, 176.2, 90.76 சதவீதமாக உள்ளது.ஏற்றுமதி
மட்டுமின்றி, இறக்குமதியும் மதிப்பீட்டு வாரத்தில் அதிகரித்துள்ளது. இம்மாத முதல்
வாரத்தில், இறக்குமதி, 13.64 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின், முதல் வாரத்தில், 60 ஆயிரத்து, 606 கோடி ரூபாய்
மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இதே காலகட்டத்தில், 68 ஆயிரத்து, 820 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி நடைபெற்றிருக்கிறது.
பெட்ரோல் தவிர்த்த பிற பொருட்கள் இறக்குமதி, 23.37 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெட்ரோலியம், கடல் பொருட்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றில் வர்த்தகம் சரிவைக்
கண்டுள்ளது.இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை, நவம்பர் முதல் வாரத்தில், 18,870 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|