பதிவு செய்த நாள்
10 நவ2020
22:05

சென்னை:மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும், இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்ற, இறக்கம் ஆகியவை காரணமாக, ‘ஆடி’ கார்களின் விலை, 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக, ஆடி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மூலப்பொருட்களின் உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்ற, இறக்கம் ஆகியவை காரணமாக, கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால், இந்தியாவில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து கார் மாடல்களின் விலையும், 2 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு, ஜன., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
தற்போதைய சூழல் மற்றும் தேவைகளின் அடிப்படையில், பல்வேறு நிலைகளில் தாக்கத்தை அறிந்தாலும், நிலையான வளர்ச்சிக்கு விலையை உயர்த்துவது அவசியமாகிறது.இந்த
பண்டிகை காலத்தை கொண்டாடும் வகையில், ‘ஆடி – க்யூ 8’ மாடல் கார் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை, 98.98 லட்சம் ரூபாய்.
நடப்பு ஆண்டில், ‘ஆடி ஏ8 எல், ஆடி ஆர்.எஸ்.,7, ஸ்போர்ட்பேக் உட்பட, 6 புதிய மாடல்கள்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|