பதிவு செய்த நாள்
10 நவ2020
22:12

புதுடில்லி:கடந்த அக்டோபரில் பங்குகள் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, முதலீட்டாளர்கள், 2,725 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
இத்திட்டத்திலிருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து, நான்காவது மாதமாக முதலீட்டை வெளியே எடுத்து வருகிறார்கள்.இருப்பினும், முதலீட்டாளர்கள் கடன் சார்ந்த திட்டங்களில், 1.1 லட்சம் கோடி ரூபாயை, கடந்த அக்டோபரில் முதலீடு செய்துள்ளனர்.இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில், கடன் சார்ந்த திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள், 51 ஆயிரத்து, 900 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
ஆக, ஒட்டுமொத்தத்தில் மியூச்சுவல் பண்டு துறையில், கடந்த அக்டோபரில், 98 ஆயிரத்து, 576 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். 52 ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.கடன் சார்ந்த திட்டங்களில், முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொண்டதை அடுத்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, 28.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுவே, கடந்த செப்டம்பர் மாதத்தில், 26.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது
குறிப்பிடத்தக்கது.இது, புதிய முதலீட்டாளர்கள் முதலீட்டுக்காக உள்ளே வந்திருப்பதையும்; பழைய முதலீட்டாளர்கள் லாபத்தினை எடுப்பதற்காக வெளியேறியுள்ளதையும் காட்டுவதாக இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|