பதிவு செய்த நாள்
10 நவ2020
22:32

புதுடில்லி:பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, சுகாதார சேவை பிரிவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஐகியுர்’ நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஐகியுர்’, பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, தங்கள் நிறுவனத்தின் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர் எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளார் என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.
கிளினிக்குகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட சுகாதார
ஊழியர்களின் நெட்வொர்க் மூலம், ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது,
‘ஐகியுர்’ நிறுவனம்.இந்நிலையில் இந் நிறுவனம், இந்தியா மற்றும் உலகளவில்,
தங்களுடைய சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, சுஜய் சாந்த்ரா கூறியதாவது:ரத்தன் டாடா எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தது, எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். மேலும் உற்சாகப்படுத்துவதும் ஆகும்.இதுவரை,
11 லட்சம் பேர்களுக்கு, சுகாதார சேவைகளை இந்தியாவில், 7 மாநிலங்களில் எங்கள் நிறுவனம் வழங்கியுள்ளது. அடுத்த, 5 ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு எங்கள் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, ரத்தன் டாடா, பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், தனிப்பட்ட முறையில் முதலீடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|