வாசனை பொருட்கள் ஏற்றுமதி   ரூ.10,000 கோடியை தாண்டியது  வாசனை பொருட்கள் ஏற்றுமதி ரூ.10,000 கோடியை தாண்டியது ...  மியூச்சுவல் பண்டு கடன் பத்திர திட்டத்தில்ரூ.1.10 லட்சம் கோடி மியூச்சுவல் பண்டு கடன் பத்திர திட்டத்தில்ரூ.1.10 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
Rs பயணியர் வாகன மொத்த விற்பனை மூன்று லட்சத்தைதாண்டியது: சி்யாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2020
21:52

புதுடில்லி:கடந்த அக்டோபரில், பயணியர் வாகன மொத்த விற்பனை, மூன்று லட்சத்தை தாண்டியுள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, சியாம் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட, இந்திய வாகனத் துறை, தற்போது மெல்ல எழுச்சி கண்டு வருகிறது. சியாம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, அக்டோபரில், பயணியர் வாகன மொத்த விற்பனை, 14.19 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து,10 ஆயிரத்து, 294 ஆக அதிகரித்துள்ளது. இது, 2019ம் ஆண்டு, இதே மாதத்தில், 2 லட்சத்து,71 ஆயிரத்து,737 ஆக இருந்தது. இதே காலத்தில், இரு சக்கர வாகன மொத்த விற்பனை, 16.88 சதவீதம் அதிகரித்து, 17லட்சத்து,57ஆயிரத்து,180லிருந்து, 20 லட்சத்து,53 ஆயிரத்து,814 ஆக உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனை, 23.8 சதவீதம் அதிகரித்து,11லட்சத்து, 16ஆயிரத்து, 886 ஆக, ஏற்றம் கண்டுள்ளது. ஸ்கூட்டர் விற்பனை, 1.79 சதவீதம் உயர்ந்து, 5 லட்சத்து, 80ஆயிரத்து,120 லிருந்து, 5 லட்சத்து,90 ஆயிரத்து, 507 ஆக அதிகரித்துள்ளது.கார், மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றின் மொத்த விற்பனை அதிகரித்துள்ள போதிலும், மூன்று சக்கர வாகன விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.


கடந்த, அக்.,ல், மூன்று சக்கர வாகன மொத்த விற்பனை, 60.91 சதவீதம் குறைந்து, 26 ஆயிரத்து, 187 ஆக சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 66ஆயிரத்து, 985 ஆக உயர்ந்து இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், பயணியர் வாகன விற்பனை வளர்ச்சி குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முகவர்கள் அதிக அளவில் வாகனங்களை கொள்முதல் செய்ததால், வாகன மொத்த விற்பனை அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


‘மாருதி சுசூகி’ முதலிடம்கடந்த அக்.,ல், மாருதி சுசூகி நிறுவனத்தின் பயணியர் வாகன மொத்த விற்பனை, 17.64 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 63 ஆயிரத்து, 656 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் உள்ளது. இதன் கார் விற்பனை, 13.9 சதவீதம் அதிகரித்து, 56ஆயிரத்து, 605 ஆக உயர்ந்துள்ளது.


கியா மோட்டார்ஸ் கார் விற்பனை, 61.25 சதவீதம் அதிகரித்து, 20ஆயிரத்து, 621 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இரு சக்கர வாகன மொத்த விற்பனையில், ஹீரோ மோட்டார் கார்ப்., முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை, 34.78 சதவீதம் அதிகரித்து, 7 லட்சத்து,91ஆயிரத்து, 137 ஆக உயர்ந்துள்ளது.ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை, 1.36 சதவீதம் உயர்ந்து, 4லட்சத்து,94 ஆயிரத்து, 459 ஆக அதிகரித்துள்ளது. டி.வி.எஸ்., நிறுவனத்தின் விற்பனை, 19.27 சதவீதம் உயர்ந்து, 3லட்சத்து,ஆயிரத்து, 380 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)