பதிவு செய்த நாள்
12 நவ2020
21:08

மும்பை:கடந்த அக்டோபரில், ‘ரியல் எஸ்டேட்’ துறையில், துணிகர முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு, இரு மடங்கு அதிகரித்துள்ளதாக, ஆலோசனை நிறுவனமான, ‘எர்னஸ்ட் யங்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் பங்குதாரர் விவேக் சோனி கூறியதாவது:கடந்த அக்டோபரில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களும், துணிகர முதலீட்டாளர்களும், 63 ஆயிரத்து, 150 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இத்தகைய முதலீடு, செப்டம்பரில், 33 ஆயிரம் கோடி ரூபாயாகவும்; 2019, அக்டோபரில், 24 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருந்தன.
கடந்த மாதம், வணிக இடங்கள் தொடர்பான முதலீடு, 27 ஆயிரத்து, 750 கோடி ரூபாயாக இருந்தது. இதில், இரு திட்டங்களில், தலா, 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டன.இது தவிர, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின், சில்லரை விற்பனை பிரிவின் மூலம், 24 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் முதலீடு குவிந்தது.
ரியல் எஸ்டேட் துறையின் இதர பிரிவுகள், ௧௦ ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளன. இதன் காரணமாக, கடந்த மாதம், ரியல் எஸ்டேட் துறையில், துணிகர முதலீடு இரு மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|