பதிவு செய்த நாள்
12 நவ2020
21:13

புதுடில்லி:‘ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா’ நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரு சக்கர வாகனங்களுக்கு, 100 சதவீத கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்காக, இந்நிறுவனம், ‘டாடா கேப்பிடல்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து, இரு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை:
ஹோண்டா நிறுவனத்தின் பல வகையான இரு சக்கர வாகனங்களுக்கு, 100 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி, குறிப்பிடத்தக்க தொகையை சேமிக்கலாம். மிகக் குறைவான ஆவணங்களுடன், விரைவாக கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடனை, 36 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம்.
இச்சலுகை வரும், 30ம் தேதி வரை அமலில் இருக்கும். இரு ஆண்டுகளில், ஹோண்டா மோட்டார்ஸ் அண்டு ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின், 4.60 கோடி வாடிக்கையாளர்கள், பல திட்டங்களின் கீழ், டாடா கேப்பிடல் நிறுவனத்திடம் வாகனக் கடன் பெற்றுள்ளனர். இந்நிறுவனம், நாடு முழுதும், 2,600 முனையங்கள் மூலம் வாகனக் கடன் வசதி அளித்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|