பொம்மை தயாரிப்பை ஒருங்கிணைக்கும் ‘ஸ்டார்ட் அப்’பொம்மை தயாரிப்பை ஒருங்கிணைக்கும் ‘ஸ்டார்ட் அப்’ ...  தவணை வசதியை நாடும் பாலிசிதாரர்கள் தவணை வசதியை நாடும் பாலிசிதாரர்கள் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் துறைக்கு அணில் போன்று உதவி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2020
22:23

மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன்,‘தற்­சார்பு இந்­தியா 3.0’ அறி­விப்­பு­க­ளின் ஒரு பகு­தி­யாக, ரியல் எஸ்­டேட் துறைக்கு ஒரு குறிப்­பிட்ட சலு­கையை அறி­வித்­துள்­ளார். இத­னால், வீடு­களை வாங்­கு­வோ­ரும் விற்­போ­ரும் பல­ன­டை­வர்; மனை வணி­கம் பெருகி, வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அரசு அளித்­துள்ள சலுகை என்ன? இது போதுமா?

வீடோ, அடுக்­கு­மா­டிக்குடி­யி­ருப்போ, எதை வாங்­கு­வ­தாக இருந்­தா­லும், அதைப் பதிவு செய்ய வேண்­டும். அதற்­குப் பத்­தி­ரப்­ப­திவு கட்­ட­ணம், முத்­தி­ரைத் தாள் கட்­ட­ணம் ஆகி­ய­வற்­றைச் செலுத்த வேண்­டும். இந்­தக் கட்­ட­ணங்­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக இருப்­பது அந்­தப் பகு­தி­யின் ‘வழி­காட்டு மதிப்பு' எனும் ‘கைடு­லைன் வேல்யூ’ என்­ப­தா­கும்.ஆனால், ‘சந்தை மதிப்பு’
என்­பது முற்­றி­லும் வேறு. அது விற்­ப­வ­ரும் வாங்­கு­ப­வ­ரும் ஒப்­புக்­கொள்­ளும் விலை. ஒரு இடத்­தின் விலை என்ன என்று நாம் கேட்­கும்­போது, ‘சந்தை மதிப்­பைத்’ தான் கேட்­கி­றோம்.


எப்­போ­தும் சந்தை விலை, வழி­காட்டு மதிப்பை விட அதி­க­மா­கவே இருக்­கும்.கொரோ­னா­வி­னால், பல நக­ரங்­களில், பிளாட்­டு­க­ளின் சந்தை விலை, வழி­காட்டு மதிப்பை விட, குறைந்து விட்­டது. இந்த இடங்­களில், வழி­காட்டு மதிப்­பின் அடிப்­ப­டை­யி­லேயே பத்­தி­ரம் பதிவு
செய்­யப்­ப­டு­கிறது.அதா­வது, குறை­வான விலை­யுள்ள இடங்­க­ளுக்கு அதிக மதிப்­பில்பத்­தி­ரம் பதிவு செய்­யப்­படும் நிலை. இத­னால் இரு­த­ரப்­புக்­கும் லாப­மில்லை.மனை வணி­கத்­தில் உள்ள பல்­வேறு இடர்­களில் ஒன்­றுக்கு தற்­போது தீர்வு கிடைத்­துள்­ளது. ஆனால், வேறு கேள்­வி­கள்அப்­ப­டியே தான் இருக்­கின்­றன.

தமிழகம்

தமி­ழ­கத்­தில், 2012ல் வழி­காட்டு மதிப்பு பல மடங்கு உயர்த்­தப்­பட்­டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்­தது. இதை­ய­டுத்து, 2017ல், வழி­காட்டு மதிப்பு, 33 சத­வீ­தம் குறைக்­கப்­பட்­டது. ஆனா­லும், ரியல் எஸ்­டேட் துறை­யில் பெரிய முன்­னேற்­றம் இல்லை. ரியல் எஸ்­டேட் துறை மீண்­டெழ வேண்­டும்; குறைந்­த­பட்­சம், 10 அல்­லது, 15 ஆண்­டுக்கு முந்­தைய வழி­காட்டு மதிப்பை, ஒரு குறிப்­பிட்ட கால அள­வுக்­கே­னும் மீண்­டும் கொண்டு வர­லாம். இதன்­மூ­லம், சந்தை மதிப்­பும் நிச்­ச­யம் சரிவு காணும்.

இரண்டு, ‘பிளோர் ஸ்பேஸ் இண்­டக்ஸ்’ எனப்­படும் எப்.எஸ்.ஐ., என்ற கணக்கு. அதா­வது,
1000 ச.அடி மனை­யில் எவ்­வ­ளவுச.அடி வீடு எழுப்­பப்­ப­ட­லாம் என்­ப­தற்கு வழங்­கப்­படும்அனு­மதி தமி­ழ­கத்­தி­லும் எப்.எஸ்.ஐ., தொடர்ந்து திருத்­தப்­பட்டு வரு­கிறது. ஆனா­லும்,
இந்­திய அள­வில் இதில் ஒரு­மித்த கருத்து இல்லை. ஏரி­க­ளை­யும் சதுப்பு நிலங்­க­ளை­யும் விவ­சாய நிலங்­க­ளை­யும் இழப்­ப­தை­விட, உய­ர­மான கட்­ட­டங்­க­ளுக்கு அனு­மதி அளிப்­பதே புத்­தி­சா­லித்­த­ன­மா­னது. அதற்­கேற்ப எப்.எஸ்.ஐ., திருத்­தப்­பட வேண்­டும்.


வேலைவாய்ப்பு

மூன்று, பத்­தி­ரப்­ப­திவு கட்­ட­ணம். தமி­ழ­கத்­தில் தற்­போது, சொத்­தின் மதிப்­பில் முத்­தி­ரைத் தாள் கட்­ட­ணம், 7 சத­வீ­த­மும் பத்­தி­ரப்­ப­திவு கட்­ட­ணம், 4 சத­வீ­த­மு­மாக மொத்­தம், 11 சத­வீ­தம் வசூல் செய்­யப்­ப­டு­கிறது.மஹா­ராஷ்­டிர அரசு, இதில் பெரிய மாற்­றத்­தைக் கொண்­டு­ வந்­துஉள்­ளது. டிசம்­பர், 2020 வரை வாங்­கப்­படும் வீடு­க­ளுக்கு அங்கே முத்­தி­ரைத் தாள் கட்­ட­ணம், 3 சத­வீ­தம் தான்.


அத­னால், கொரோனா காலத்­தி­லும் விற்­பனை நன்கு உயர்ந்­துள்­ளது. ரியல் எஸ்­டேட் துறை தான், இந்­தி­யா­வில் விவ­சா­யத்­துக்கு அடுத்து அதிக அள­வில் வேலை­வாய்ப்பை
உரு­வாக்­கு­கிறது. அந்­தத் துறையை மீட்­பது என்­பது, ஏழை எளிய உட­லு­ழைப்­புத்
தொழி­லா­ளர்­க­ளுக்கு கவு­ர­வ­மாக சோறு போடு­வ­தற்­குச் சமம்.அந்­தத் திசை­யில் மத்­திய அரசு ஒரு அணில் போன்று உத­வி­யி­ருக்­கிறது. தேவை, அனு­மார் போன்ற உதவி என்­பதை மத்­திய – மாநில அர­சு­கள் உணர வேண்­டும்.


ஆர்.வெங்­க­டேஷ்

pattamvenkatesh@gmail.com

ph: 98410 53881

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)