பதிவு செய்த நாள்
15 நவ2020
22:23

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,‘தற்சார்பு இந்தியா 3.0’ அறிவிப்புகளின் ஒரு பகுதியாக, ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளார். இதனால், வீடுகளை வாங்குவோரும் விற்போரும் பலனடைவர்; மனை வணிகம் பெருகி, வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அளித்துள்ள சலுகை என்ன? இது போதுமா?
வீடோ, அடுக்குமாடிக்குடியிருப்போ, எதை வாங்குவதாக இருந்தாலும், அதைப் பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பத்திரப்பதிவு கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களுக்கு அடிப்படையாக இருப்பது அந்தப் பகுதியின் ‘வழிகாட்டு மதிப்பு' எனும் ‘கைடுலைன் வேல்யூ’ என்பதாகும்.ஆனால், ‘சந்தை மதிப்பு’
என்பது முற்றிலும் வேறு. அது விற்பவரும் வாங்குபவரும் ஒப்புக்கொள்ளும் விலை. ஒரு இடத்தின் விலை என்ன என்று நாம் கேட்கும்போது, ‘சந்தை மதிப்பைத்’ தான் கேட்கிறோம்.
எப்போதும் சந்தை விலை, வழிகாட்டு மதிப்பை விட அதிகமாகவே இருக்கும்.கொரோனாவினால், பல நகரங்களில், பிளாட்டுகளின் சந்தை விலை, வழிகாட்டு மதிப்பை விட, குறைந்து விட்டது. இந்த இடங்களில், வழிகாட்டு மதிப்பின் அடிப்படையிலேயே பத்திரம் பதிவு
செய்யப்படுகிறது.அதாவது, குறைவான விலையுள்ள இடங்களுக்கு அதிக மதிப்பில்பத்திரம் பதிவு செய்யப்படும் நிலை. இதனால் இருதரப்புக்கும் லாபமில்லை.மனை வணிகத்தில் உள்ள பல்வேறு இடர்களில் ஒன்றுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. ஆனால், வேறு கேள்விகள்அப்படியே தான் இருக்கின்றன.
தமிழகம்
தமிழகத்தில், 2012ல் வழிகாட்டு மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 2017ல், வழிகாட்டு மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனாலும், ரியல் எஸ்டேட் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ரியல் எஸ்டேட் துறை மீண்டெழ வேண்டும்; குறைந்தபட்சம், 10 அல்லது, 15 ஆண்டுக்கு முந்தைய வழிகாட்டு மதிப்பை, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கேனும் மீண்டும் கொண்டு வரலாம். இதன்மூலம், சந்தை மதிப்பும் நிச்சயம் சரிவு காணும்.
இரண்டு, ‘பிளோர் ஸ்பேஸ் இண்டக்ஸ்’ எனப்படும் எப்.எஸ்.ஐ., என்ற கணக்கு. அதாவது,
1000 ச.அடி மனையில் எவ்வளவுச.அடி வீடு எழுப்பப்படலாம் என்பதற்கு வழங்கப்படும்அனுமதி தமிழகத்திலும் எப்.எஸ்.ஐ., தொடர்ந்து திருத்தப்பட்டு வருகிறது. ஆனாலும்,
இந்திய அளவில் இதில் ஒருமித்த கருத்து இல்லை. ஏரிகளையும் சதுப்பு நிலங்களையும் விவசாய நிலங்களையும் இழப்பதைவிட, உயரமான கட்டடங்களுக்கு அனுமதி அளிப்பதே புத்திசாலித்தனமானது. அதற்கேற்ப எப்.எஸ்.ஐ., திருத்தப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பு
மூன்று, பத்திரப்பதிவு கட்டணம். தமிழகத்தில் தற்போது, சொத்தின் மதிப்பில் முத்திரைத் தாள் கட்டணம், 7 சதவீதமும் பத்திரப்பதிவு கட்டணம், 4 சதவீதமுமாக மொத்தம், 11 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது.மஹாராஷ்டிர அரசு, இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துஉள்ளது. டிசம்பர், 2020 வரை வாங்கப்படும் வீடுகளுக்கு அங்கே முத்திரைத் தாள் கட்டணம், 3 சதவீதம் தான்.
அதனால், கொரோனா காலத்திலும் விற்பனை நன்கு உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை தான், இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிக அளவில் வேலைவாய்ப்பை
உருவாக்குகிறது. அந்தத் துறையை மீட்பது என்பது, ஏழை எளிய உடலுழைப்புத்
தொழிலாளர்களுக்கு கவுரவமாக சோறு போடுவதற்குச் சமம்.அந்தத் திசையில் மத்திய அரசு ஒரு அணில் போன்று உதவியிருக்கிறது. தேவை, அனுமார் போன்ற உதவி என்பதை மத்திய – மாநில அரசுகள் உணர வேண்டும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|