பதிவு செய்த நாள்
19 நவ2020
21:42

புதுடில்லி:இந்திய டேட்டா சென்டர் துறை, கடந்த ஜனவரி முதல், செப்டம்பர் வரையிலான காலத்தில், 2,960 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.
தரவுகளை சேமிப்பது உள்ளிட்டவற்றுக்காக அமைக்கப்படும், ‘டேட்டா சென்டர்கள்’, இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு கிடைத்திருக்கும் ஒரு நல் வாய்ப்பாக மாறி இருக்கிறது.இது குறித்து, சொத்து ஆலோசனை நிறுவனங்களான, அனராக் மற்றும் மேஸ் ஆகிய நிறுவனங்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியர்களின் தரவு நுகர்வானது, கடந்த, 2014ல், ஒரு மாதத்தில், ஒரு நபருக்கு, 0.3 ஜி.பி., என்ற அளவில் இருந்தது. இதுவே, கடந்த, 2018ல், 10 ஜி.பி., எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது. 2025ல் இதுவே, 25 ஜி.பி., எனும் அளவுக்கு
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டில், தற்போது மூன்றாம் நபர் தரவு மையங்கள் எண்ணிக்கை, 126 ஆக உள்ளது. இவை மொத்தம், 75 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக உள்ளது.
இந்த, 126 மையங்களை மொத்தம், 53 நிறுவனங்கள் சொந்தமாக வைத்திருக்கின்றன;
அல்லது, நடத்தி வருகின்றன.டேட்டா சென்டர்கள் துறையின் வருவாய், 2014ல், 2,856 கோடி ரூபாயாக இருந்தது, 2019ல், 7,474 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இத்துறையில் கடந்த, 2008ம் ஆண்டிலிருந்து, 7,230 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. அதிலும், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும், 2,930 கோடி ரூபாய் அளவுக்கு
முதலீடுகள் வந்துள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|