டேட்டா சென்டர் துறை முதலீடுகள் அதிகரிப்புடேட்டா சென்டர் துறை முதலீடுகள் அதிகரிப்பு ... எல் அண்டு டி., நிறுவனத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஆர்டர் எல் அண்டு டி., நிறுவனத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஆர்டர் ...
நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் கணிப்பை மாற்றிய ‘மூடீஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2020
21:43

புது­டில்லி:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, இதற்கு முன் கணித்­தி­ருந்­ததை விட, கூடு­தல் வளர்ச்சி பெறும் என, அமெ­ரிக்­காவை தலை­மை­ய­க­மாக கொண்ட, ‘மூடிஸ் இன்­வெஸ்ட்­டார்ஸ் சர்­வீ­சஸ்’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னம், இதற்கு முன், நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சி­யா­னது, மைனஸ், 11.5 சத­வீ­த­மாக இருக்­கும் என அறி­வித்­தி­ருந்­தது.
இந்­நி­லை­யில், தற்­போது, தனது கணிப்பை மாற்றி, வளர்ச்சி, மைனஸ், 10.6 சத­வீ­த­மாக இருக்­கும் என தெரி­வித்­துள்­ளது.


மத்­திய அரசு, சமீ­பத்­தில் அறி­வித்த ஊக்க சலு­கை­கள் திட்­ட­மா­னது உற்­பத்தி, வேலைவாய்ப்பு, நீண்ட கால வளர்ச்சி ஆகி­ய­வற்­றுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும் வகை­யில் அமைந்­துஉள்­ள­தால், வளர்ச்சி மேலும் அதி­க­ரிக்­கும் என கரு­து­வ­தாக, மூடீஸ் தெரி­வித்­துள்­ளது. மேலும், அடுத்த நிதி­யாண்­டான, 2021_22ல், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 10.8 சத­வீ­த­மாக இருக்­கும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.


இதற்கு முன், இந்­நி­று­வ­னம் அடுத்த நிதி­யாண்­டில் வளர்ச்சி, 10.6 சத­வீ­த­மாக இருக்­கும் என கணித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.மேலும், கடந்த நிதி­யாண்­டில், அர­சின் கடன், மொத்த
உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சி­யில், 89.3 சத­வீ­த­மாக இருக்­கும் என்­றும்; நடப்பு நிதி­யாண்­டில் இதுவே, 87.5 சத­வீ­த­மாக குறை­யும்என்­றும் எதிர்­பார்ப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

இருப்­பி­னும், நாட்­டின் நுகர்­வோர் நம்­பிக்கை, கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, இன்­னும் குறை­வா­கவே இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)