பதிவு செய்த நாள்
19 நவ2020
21:46

மும்பை:கடந்த சில நாட்களாக, தொடர்ந்து, சாதனை உயர்வை கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள், நேற்று, சரிவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 44230 புள்ளிகளைத் தொட்டது. இருப்பினும், வர்த்தகத்தின் இறுதியில், 580.09 புள்ளிகளை இழந்து, 43599.96
புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.31 சதவீத சரிவாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 12963 புள்ளிகளை வர்த்தகத்தின் இடையே தொட்டது. பின், வர்த்தகத்தின் இறுதியில், 166.55 புள்ளிகள் சரிந்து, 12771.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்ற நிறுவனங்களில், எஸ்.பி.ஐ., வங்கி, அதிகபட்சமாக, 5 சதவீத சரிவைக் கண்டது. இதனையடுத்து, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி, பார்தி
ஏர்டெல் ஆகிய நிறுவன பங்குகளும் விலை சரிவைக் கண்டன.இதற்கு மாறாக, பவர்கிரிட், ஐ.டி.சி., என்.டி.பி.சி., டாடா ஸ்டீல், டைட்டன் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன.
சந்தைகள், வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில், லாபத்தினை எடுத்துக்கொள்ளும்
விதமாக, அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டதே சந்தை சரிவதற்கு காரணமாக அமைந்தது என்கிறார்கள், முதலீட்டாளர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|