பதிவு செய்த நாள்
19 நவ2020
21:48

புதுடில்லி:‘பி – நோட்’ எனும், பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செய்யப்படும் முதலீடுகள், 14 மாதங்களில் இல்லாத வகையில், கடந்த அக்டோபரில் அதிகரித்துள்ளது.
இந்திய மூலதன சந்தைகளில், பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செய்யப்பட்ட முதலீடு,
அக்டோபர் இறுதியில், 78 ஆயிரத்து, 686 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, அதற்கு முந்தைய, 14 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள், தங்களை பதிவு செய்துகொள்ளாமல், இந்திய சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வழி, பங்கேற்பு பத்திரங்கள் ஆகும்.
இந்த பத்திரங்களை, பதிவு செய்யப்பட்ட, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கியிருக்கும் தகவல்கள்
அடிப்படையில், கடந்த செப்டம்பர் இறுதியில், பங்கேற்பு பத்திர முதலீடு, 69 ஆயிரத்து, 821 கோடி ரூபாயாக இருந்தது.இது, அக்டோபர் இறுதியில், 78 ஆயிரத்து, 686 கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது. கடந்த, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, அதிக அளவிலான முதலீடுகள் அக்டோபரில் வந்துள்ளன. அம்மாதத்தில், முதலீடு, 79 ஆயிரத்து, 88 கோடி ரூபாயாக இருந்தது.
அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள், உலகளவில் அதிகரித்த பணப்புழக்கம், அரசு அறிவித்த, உற்பத்தியுடன் ஒருங்கிணைந்த ஊக்கச் சலுகை திட்டங்கள், இறக்குமதிக்கு மாற்று திட்டங்கள் ஆகியவை காரணமாக, இந்திய சந்தையில், முதலீடு அதிகரித்துள்ளது என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|