பதிவு செய்த நாள்
20 நவ2020
22:40

புதுடில்லி:கிராமப்புற மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், கடந்த அக்டோபரில், சற்று அதிகரித்துள்ளது.
சில உணவு பொருட்களின் விலை அதிகரிப்பால், கிராமப்புற மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், முறையே, 6.54 மற்றும் 6.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், இதுவே அதிகமாகும்.இதுவே, கடந்த செப்டம்பரில் முறையே, 6.10 மற்றும் 6.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த அக்டோபரில், கிராமப்புற மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கான உணவு குறியீடுகளின் அடிப்படையிலான பணவீக்கம் முறையே, 7.92 மற்றும் 7.96 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த செப்டம்பரில், 7.61 மற்றும் 7.65 சதவீதமாக இருந்தது.வேளாண் தொழிலாளர்களுக்கான, சில்லரை விலை பணவீக்கம், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
அதிகபட்சமாக, தமிழ்நாட்டில், 1,242 புள்ளிகளும்; குறைந்தபட்சமாக, ஹிமாச்சல் பிரதேசத்தில், 830 புள்ளிகளும் உள்ளன. கிராமப்புற தொழிலாளர்களை பொறுத்தவரை, அதிகபட்சமாக, தமிழ்நாட்டில், 1,226 புள்ளிகளும்; குறைந்தபட்சமாக, ஹிமாச்சல் பிரதேசத்தில், 877 புள்ளிகளுமாக உள்ளன.பணவீக்க உயர்வு, கிராமப்புற ஊழியர்களுடைய ஊதியத்தில், சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்கிறது அமைச்சகம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|