தொடர் சாதனையில் அன்னிய செலாவணிதொடர் சாதனையில் அன்னிய செலாவணி ... தனி நபருக்கு மட்டுமல்ல அரசுக்கும் உதவும் சிறு சேமிப்பு தனி நபருக்கு மட்டுமல்ல அரசுக்கும் உதவும் சிறு சேமிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பு தாமதாமாகும் இறுதி வரைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
21:59

மும்பை:லட்­சுமி விலாஸ் வங்­கியை, டி.பி.எஸ்., இந்­தி­யா­வு­டன் இணைப்­ப­தற்­கான வரைவு திட்­டத்தை, ரிசர்வ் வங்கி இறுதி செய்து, வெள்­ளிக்­கி­ழமை அன்று அறி­விக்­கும் என
தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அன்று அறி­விக்­கப்­ப­டாத நிலை­யில், இன்­னும் சில
நாட்­க­ளா­கும் என தெரிய வந்­துள்­ளது.

மாற்­றுக் கருத்து

லட்­சுமி விலாஸ் வங்­கி­யின் இணைப்­புத் திட்­டத்­துக்­கான வரைவு அறிக்­கையை, ரிசர்வ் வங்கி தயார் செய்­துள்­ளது. இந்த புதிய வரைவு திட்­டம் குறித்து, லட்­சுமி விலாஸ் வங்கி மற்­றும் டி.பி.எஸ்., வங்கி ஆகி­ய­வற்­றின் பங்­கு­தா­ரர்­கள், முத­லீட்­டா­ளர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள்
உள்­ளி­டோ­ரி­டம் கருத்து கேட்­கப்­படும் என்­றும், மாற்­றுக் கருத்து இருப்­பின் தெரி­விக்­க­லாம் என்­றும், ரிசர்வ் வங்கிஅறி­வித்­தி­ருந்­தது.

அதன்­படி, வெள்­ளிக்­கி­ழமை மாலை, 5:00 மணி வரை கருத்­துக்­கள் கேட்­கப்­பட்டு, வரைவு அறிக்கை இறுதி செய்­யப்­படும் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால், எதிர்­பார்த்­த­படி அறி­விப்பு வெளி­யா­க­வில்லை.

விலை சரிவு

இறுதி அறி­விப்பு வெளி­யாக, இன்­னும் ஒரு வாரம் வரை ஆகும் என, ரிசர்வ் வங்கி அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.இந்த புதிய வரைவு திட்­டத்­தின்­படி, லட்­சுமி விலாஸ் வங்­கி­யின் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு, 1 பைசா­வும் கிடைக்­காது என்று கூறப்­ப­டு­கிறது. இவ்­வங்­கி­யில், அதி­க­பட்ச பங்கை வைத்­தி­ருக்­கும் அதன் பங்­கு­தா­ரர்­களில் ஒரு­வ­ரான, கே.ஆர்.பிர­தீப் வசம் மட்­டும், 4.8 சத­வீத பங்­கு­கள் உள்ளன.

இதற்­கி­டையே, கே.ஆர்.பிர­தீப், இறுதி வரைவு வெளி­யா­வதை பொறுத்து, மேற்­கொண்டு
நட­வ­டிக்­கை­யில் இறங்­கப் போவ­தா­க­வும்; தன்­னு­டைய முத­லீட்­டுக்கு ஏதா­வது மதிப்பு கிடைக்க வேண்­டும் என்ற தன் கருத்தை ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளார்.ரிசர்வ் வங்கி அறி­விப்பை வெளி­யிட்­ட­தி­லி­ருந்து, இது­வரை லட்­சுமி விலாஸ் வங்­கி­யின்
பங்­கு­கள் விலை, 35சத­வீ­தம் வரை சரி­வைக் கண்­டுள்­ளது.

அனு­மதி கொடுக்­காத ஆர்.பி.ஐ.,

லட்­சுமி விலாஸ் வங்­கி­யின் பங்­கு­தா­ரர்­களில், அதி­க­பட்ச பங்கை வைத்­தி­ருக்­கும்
கே.ஆர்.பிர­தீப் கடந்த, 2018ம் ஆண்­டி­லேயே டி.பி.எஸ்., வங்கி, 50 சத­வீத பங்­கு­களை வாங்­கிக் கொள்ள தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­த­தா­க­வும், ஆனால், ரிசர்வ் வங்கி அதற்கு அனு­மதி வழங்­க­வில்லை என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

அந்த சம­யத்­தில், டி.பி.எஸ்., வங்கி, வெறும் முத­லீட்டை மட்­டும் மேற்­கொள்­ளா­மல்,
வங்­கியை அதுவே நடத்­த­வும் விரும்­பி­யது. ஆனால், அதற்கு ரிசர்வ் வங்கி அப்­போது அனு­மதி அளிக்க மறுத்­து­விட்­டது என்­றும், அவர் தெரி­வித்­துள்­ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)