பதிவு செய்த நாள்
25 நவ2020
22:45

புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கியின் மியூச்சுவல் பண்டு வணிகத்தை, முத்துாட் பைனான்ஸ் வாங்குவதற்கு அனுமதி வழங்க, ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.
ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் மியூச்சுவல் பண்டு வணிகத்தை, முத்துாட் பைனான்ஸ் வாங்குவதற்கான, பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில், கடந்த ஆண்டு நவம்பரில் கையெழுத்திட்டிருந்தது.இதன் மூலம், ஐ.டி.பி.ஐ., அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளும், முத்துாட்டுக்கு மாறுவதாக இருந்தது.
இருப்பினும், இதற்கு செபி மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதி தேவை.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, சில நடைமுறை போதாமைகளை காரணம் காட்டி, அனுமதி வழங்க மறுத்துவிட்டது.முத்துாட் பைனான்ஸ், ஐ.டி.பி.ஐ., மியூச்சுவல் பண்டு வணிகத்தை, 215 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|