பதிவு செய்த நாள்
25 நவ2020
22:48

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, ‘டெஸ்லா’வின் சந்தை மதிப்பு, 526.45 டாலராக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 38.96 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது, ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மோட்டார், பியட், ஹோண்டா, டெய்ம்லர் ஏ.ஜி., பெராரி, பி.எம்.டபுள்யு., போக்ஸ்வேகன், ஹூண்டாய் ஆகிய, 9 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பை விட அதிகமாகும்.நேற்றைய நிலவரப்படி, டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 526.45 பில்லியன் டாலர் ஆகும். இதுவே, மேற்குறிப்பிட்ட, 9 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 480.62 பில்லியன் டாலர் ஆகும்.
டிசம்பர், 21ம் தேதி முதல், அமெரிக்காவின், 500 பெரிய நிறுவனங்களை கொண்ட பங்குச் சந்தை குறியீடான, ‘எஸ் அண்டு பி., 500’ குறியீட்டில், டெஸ்லா இணைய உள்ளது. இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து, டெஸ்லா பங்குகள் விலை உயர்ந்தன. சந்தை மதிப்பும் அதிகரித்துஉள்ளது.
இதன் தொடர்ச்சியாக, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சை பின்னுக்குத்தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|