பதிவு செய்த நாள்
25 நவ2020
23:20

புதுடில்லி:எச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மதிப்பு, நேற்று, 8 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது. இதையடுத்து, உள்நாட்டு வங்கிகளில், இந்த உயரத்தை எட்டிய முதல் வங்கியாக, இது முன்னேறியுள்ளது.
நேற்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தின் துவக்கத்தில், எச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மதிப்பு, 8.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. பங்கின் விலை, ஓராண்டு உயர்வான 1,464 ரூபாயைத் தொட்டது.எச்.டி.எப்.சி., வங்கி, இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட, மூன்றாவது வங்கியாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 13.31 லட்சம் கோடி ரூபாயும்; டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ், 10.14 லட்சம் கோடி ரூபாயும் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களாக, முதல் இரண்டு இடத்தில் உள்ளன.நேற்று வர்த்தகத்தின் பிற்பாதியில், சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, இவ் வங்கியின் சந்தை மதிப்பு, 7.75 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|