பதிவு செய்த நாள்
25 நவ2020
23:23

சென்னை:இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின், திரள் வளர்ச்சி நிதியை பயன்படுத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் இடையே, நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில், 22.69 லட்சம், குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 2.57 கோடி ரூபாய் முதலீட்டில், 1.45 கோடி பேருக்கு, வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.தேசிய அளவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 29.70 சதவீதம்; ஏற்றுமதியில், 49.66 சதவீதம் பங்கு அளிக்கின்றன.
இந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் இடையே, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில் கையெழுத்தானது.
இதையடுத்து, நிதியுதவி தேவைப்படும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்பொருட்டு, எஸ்.ஐ.டி.பி.ஐ., திரள் வளர்ச்சி நிதியை பயன்படுத்திட, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உதவும்.
ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ்
சென்னை, கிண்டியில் இயங்கி வரும், தொழில் வணிகத்துறையின் மண்டல இணை இயக்குனர் அலுவலகம், கோவை மற்றும் மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு, ஐ.எஸ்.ஓ., 9001:2015 தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|