பதிவு செய்த நாள்
25 நவ2020
23:27

மும்பை:நேற்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், 2.25 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.சந்தைகள் சாதனை உயரத்தை எட்டியதை அடுத்து, நேற்று முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதி செய்துகொள்ள பங்குகளை அதிகளவில் விற்றனர். இதன் தொடர்ச்சியாக, சந்தை சரிவைக் கண்டது.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 43828.10 புள்ளிகளாகவும்; தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 12858.40 புள்ளிகளாகவும் சரிந்தன.சென்செக்ஸ் குறியீட்டில், கோட்டக் வங்கி, அதிகபட்சமாக, 3 சதவீதம்அளவுக்கு சரிவைக் கண்டது.கடந்த இரண்டு நாட்களாக சந்தைகள் புதிய உயரங்களை தொட்டதை அடுத்து, பலர் லாபத்தை எடுப்பதற்காக, கைவசம் இருந்த பங்குகளை நேற்று விற்றனர்.இதையடுத்து, சந்தை சரிந்ததால், 2.25 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|