பதிவு செய்த நாள்
26 நவ2020
22:28

புதுடில்லி:‘அமேசான்’ மற்றும் ‘பியூச்சர் கூப்பன்’ நிறுவனங்களுக்கு இடையேயான வழக்கின் அங்கமாக இருப்பதிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற, ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ நிறுவனத்தின் கோரிக்கையை, சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
அண்மையில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை, மொத்த விலை, சரக்கு போக்குவரத்து, கிடங்குகள் உள்ளிட்ட வணிகங்களை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
பியூச்சர் கூப்பனில் முதலீடு செய்திருக்கும் அமேசான், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக, சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் முறையீடு செய்தது.இதையடுத்து, இந்த ஒப்பந்தத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் அங்கமாக இருப்பதிலிருந்து விடுவிக்க வேண்டும் என, பியூச்சர் ரீட்டெய்ல் கோரியது. இதை, சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம் ஏற்க மறுத்து விட்டது.இதற்கிடையே, ரிலையன்ஸ் பியூச்சர் குழுமத்தின் வணிகங்களை கையகப்படுத்து வதற்கு, இந்திய சந்தைகள் போட்டி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|