பதிவு செய்த நாள்
01 டிச2020
22:24

புதுடில்லி:பண்டிகை கால கொண்டாட்டங்கள், கடந்த மாதம் முதல் பாதியுடன் முடிவடைந்த நிலையில், நவம்பர் மாத வாகன விற்பனை ஓரளவு அதிகரித்திருக்கிறது.
‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின், நவம்பர் மாத விற்பனை, 1.7 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது. இந்நிறுவனம் மொத்தம், 1.53 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. ஆனால், ‘ஹூண்டாய்’ நிறுவனம் சரிவைக் கண்டுள்ளது. இந்நிறுவனம், 2.1 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் இருக்கும், ‘பஜாஜ் ஆட்டோ’
நிறுவனத்தின் விற்பனையும், 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம், 4.22 லட்சம் வாகனங்களை இம்மாதத்தில் விற்பனை செய்திருக்கிறது.‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனத்தின் விற்பனை, 21 சதவீதம் அதிகரித்து, 3.22 லட்சம் வாகனங்கள்
விற்பனை ஆகியுள்ளன.
எம்.ஜி., மோட்டார் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், அதிகபட்ச எண்ணிக்கையை நவம்பரில் எட்டியிருக்கிறது. இந்நிறுவனம், 4,163 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதேபோல், ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் விற்பனையும், 50.1 சதவீதம் அதிகரித்து உள்ளது. மொத்தம், 21 ஆயிரத்து, 22 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. வர்த்தக வாகன பிரிவில், ‘அசோக் லேலண்டு’ 5 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரிப்பை கண்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|