பதிவு செய்த நாள்
03 டிச2020
21:17

புதுடில்லி:கடன் வாங்கியவர்களில், 76 சதவீதம் பேருக்கு, அதற்கு வட்டி எவ்வளவு
வசூலிக்கப்படுகிறது என்பதுகூட தெரியவில்லை. மேலும், பெரும்பாலானோருக்கு ‘சிபில்’ மதிப்பெண் குறித்தும் தெரியவில்லை என்பது ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடன் கொடுப்பதற்கு ஒருவர் தகுதியானவர்தானா என்பதை அறிந்துகொள்ள, சிபில்
மதிப்பெண் உதவுகிறது. இந்நிலையில், பெரும்பாலானவர்கள் இது குறித்து அறியாமல்
இருக்கிறார்கள்.‘ஹோம் கிரெடிட் இந்தியா’ எனும் நிறுவனம், 7 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில்,மேலும் தெரியவந்துள்ளதாவது:
ஆய்வில் பங்கேற்றவர்களில், 58 சதவீதம் பேர்கள், சிபில் மதிப்பெண் என்றால் என்ன; அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து புரிந்துகொண்டிருக்கிறார்கள்.ஆனாலும், 68 சதவீதம் பேர்களுக்கு, அவர்களுடைய, சிபில் மதிப்பெண் எவ்வளவு என்பது தெரியவில்லை. இவ்வளவுக்கும், இவர்கள் கடன் வாங்கி இருக்கிறார்கள்.
பாட்னாவில் தான், மிக குறைவாக, 22 சதவீதம் பேருக்கு மட்டுமே, சிபில் குறித்து தெரிந்து உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், கோல்கட்டாவும் மும்பையும் உள்ளன.மேலும், கடன் வாங்கியவர்களில், 76 சதவீதம் பேருக்கு, அதற்கான வட்டி எவ்வளவு என்பதும்
தெரியவில்லை! அவர்களுக்கு, மாதத் தவணை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வதில் மட்டுமே ஆர்வம்இருக்கிறது.
பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், தங்களின் நிதிநிலை குறித்து மேலும் அறிந்து
கொள்ளவும், நிதி குறித்த பாடங்களை பயிலவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|