பதிவு செய்த நாள்
03 டிச2020
21:22

மும்பை:நடப்பு ஆண்டில் நிறுவனங்களின், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீடுகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்த ஆண்டில், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், புதிய
பங்குகளை வெளியிட, வரிசையில் தயாராக நிற்கின்றன.
நடப்பு ஆண்டில், இதுவரை புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் கிட்டத்தட்ட, 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளையும் மீறி, கடந்த ஆண்டை விட அதிக அளவில் நிதி திரட்டப்பட்டுள்ளது.இதையடுத்து, அடுத்து வரும், 2021ம் ஆண்டிலும், அதிக நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
கல்யாண் ஜூவல்லர்ஸ், இண்டிகோ பெயின்ட்ஸ், ஸ்டவ் கிராப்ட், சம்ஹி ஓட்டல்ஸ், மிசர்ஸ் பெக்டார்ஸ் புட் என கிட்டத்தட்ட, 30 நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.இவை
கிட்டத்தட்ட, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் திரட்டும் முயற்சியில் இறங்கி
இருக்கின்றன.எல்.ஐ.சி., நிறுவனமும் அடுத்த ஆண்டில் பங்கு வெளியீட்டுக்கு வந்தால், புதிய சாதனை எட்டப்படும் என்கிறார்கள், பங்குச் சந்தைநிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|