பதிவு செய்த நாள்
03 டிச2020
21:24

மும்பை:ரிலையன்ஸ் இன்ப்ராடெல் நிறுவனத்தின் தீர்மான திட்டத்தை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட சொத்துக்களை, ரிலையன்ஸ் ஜியோ எடுத்துக் கொள்ளலாம் என்றும், தீர்ப்பாயம் தெரிவித்துஉள்ளது.
ரிலையன்ஸ் இன்ப்ராடெல், அனில் அம்பானியின் தலைமையிலான, ரிலையன்ஸ்
கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின், துணை நிறுவனமாகும்.கடன் வழங்கியவர்கள்
ஏற்றுக்கொண்ட தீர்மான திட்டத்தின் படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்கள், யு.வி., அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு சென்றுவிடும். செல்போன் டவர் நிறுவனமான, ரிலையன்ஸ் இன்ப்ராடெல், ஜியோ வசம் சென்றுவிடும்.
இதற்கு, ஜியோ ஏழு ஆண்டுகள் அவகாசத்தில், 20 – 23 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்.ரிலையன்ஸ் இன்ப்ராடெல் வசம், 43 ஆயிரம் செல்போன் கோபுரங்களும்,
1.72 லட்சம் கிலோ மீட்டர் பைபர் வசதியும் உள்ளது.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
நிறுவனம், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், திவால் நிலைக்கு சென்றுவிட்டது. திவால் நடவடிக்கைக்கு சென்றபோது அதற்கு, 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய தீர்மான திட்டத்தின்படி, கடன் வழங்கியவர்களுக்கு, 4,400 கோடி ரூபாய்
கிடைக்கும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|