பதிவு செய்த நாள்
10 டிச2020
21:25

புதுடில்லி:டாடா குழுமம், அண்மைக் காலத்தில் டிஜிட்டல் வர்த்தகத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 8,890 கோடி ரூபாயை இத் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த தொகையை, மளிகை பொருட்களுக்கான, ‘பிக்பாஸ்கெட்’ மற்றும் மருந்து பொருட்களுக்கான’ ‘1எம்.ஜி’ ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தில் கிட்டத்தட்ட, 7,030 கோடி ரூபாயையும்; ‘1 எம்.ஜி.,’ நிறுவனத்தில், 1,850 கோடி ரூபாயையும் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.முதலீட்டை மேற்கொள்வதற்கான பணிகள், இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டன. அடுத்து வரும் வாரங்களில் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று விடும்.இவ்வாறு கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|