பதிவு செய்த நாள்
10 டிச2020
21:26

மும்பை:இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான, முகேஷ் அம்பானி, தாத்தாவாகி உள்ளார். முகேஷ் அம்பானியின் மூத்த மகனுக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரியான, ரஸ்ஸல் மேத்தாவின் மகள், ஸ்லோகாவுக்கும் கடந்த, 2019ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. முகேஷ் அம்பானி – நிடா தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள். இதில் ஆகாஷ், இஷா இருவரும் இரட்டையர். அடுத்து அனந்த். ஆகாஷ், இஷா இருவருக்கும், தற்போது 29 வயது. அனந்த் வயது, 25.
சற்று நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த அம்பானி குடும்பத்தினர், தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு தான், மும்பை திரும்பி இருந்தனர். முகேஷ் அம்பானி மற்றும் நிடா ஆகியோர், முதன் முறையாக தாத்தா, பாட்டி ஆகியிருப்பதில்,பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என, குடும்பத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|