தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி ... தொழில் துறை உற்பத்தி: நம்பிக்கையூட்டும் உயர்வு தொழில் துறை உற்பத்தி: நம்பிக்கையூட்டும் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எகிறும் பணவீக்கம்: செருப்புக்காக காலை வெட்டுவதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2020
22:14

பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நெறி­மு­றை­யைத் தளர்த்­தும் மன­நி­லை­யில், இந்­திய அரசு இருப்­ப­தா­கச் செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்ளன. இத­னால், காய்­க­றி­கள், மளிகை சாமான்­கள், இத­ரப் பொருட்­கள் அனைத்­தும் விலை­யு­யர்­வைச் சந்­திக்­கும் அபா­யம் உள்­ளது.

இந்­திய ரிசர்வ் வங்கி, பண­வீக்க இலக்கை நிர்­ண­யித்து செயல்­ப­டுத்தி வரு­கிறது. சில்­லரை பண­வீக்­கம், 4 சத­வீ­தத்­துக்­குள் இருக்­க­வேண்­டும். அதி­க­பட்­சம் மேலே, கீழே, 2 சத­வீ­தம் வரைக்­கும் போக­லாம் என்ற சலு­கை­யும் உண்டு.இந்த ஆண்டு தொடக்­கம் வரை கூட, இந்த இலக்கு கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. ஆனால், கொரோனா ஊர­டங்கு தளர்­வு­க­ளுக்கு பின்­,
பண­வீக்­கம் கிடு­கி­டு­வென உய­ரத் துவங்­கி­விட்­டது.அக்­டோ­பர் மாதம், சில்­லரை பண­வீக்­கம், 7.61 சத­வீ­தம். ஜூன் மாதம் முதலே, 6 சத­வீ­தத்­துக்கு மேல் தான் பண­வீக்­கம்.

எதிர்பார்ப்பு

வங்­கி­களின் வட்டி விகி­தங்­கள் எப்­போ­தும் இல்­லாத அள­வுக்­குக் குறை­வாக உள்ளன.
சந்­தை­யில் பணப்­பு­ழக்­கம் அதி­கம்.சமீ­பத்­தில், இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் கவர்­னர் சக்­தி­காந்த தாஸ் பேசும்­போது, பண­பு­ழக்­கத்­தைக் குறைக்­கும் திட்­டம்ஏதும் இல்லை என்று தெரிவித்­தார்.
அதா­வது, பணப்­பு­ழக்க அதி­க­ரிப்­பால், கூடு­தல் விலை கொடுத்து பொருட்­களை வங்­கும் நிலை உரு­வா­கிறது. கூடவே, பெட்­ரோல், டீசல் விலை­யும் உயர்ந்­து­கொண்டே செல்­வ­தால்,
பண­வீக்­கம் பெருகி வரு­கிறது.

இந்­நி­லை­யில், அர­சாங்­கம், பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முயற்சி செய்­யும் என்­பது தான் பொது­வான எதிர்­பார்ப்பு. ஆனால், அரசு வேறு மாதிரி யோசிக்­கிறது. பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முனைந்­தால், துளிர்­விட்டு வரும் தொழில், பொரு­ளா­தார வளர்ச்சி பாதிக்­கப்­ப­ட­லாம். பெரு­நி­று­வ­னங்­கள் வாங்­கிய கடன்­களின் வட்டி கணி­ச­மாக உயர்ந்­து­வி­ட­லாம்.


அத­னால், அவர்­களும் தொழி­லில் ஆர்­வம் காட்­டா­மல் போய்­வி­ட­லாம். இதன் கார­ண­மாக,
4 சத­வீத பண­வீக்க இலக்கை, மேலும் தளர்த்­த­லாம் என்று கருத்து நில­வு­கிறது.இது, எதிர்­ம­றை­யான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்­தும். சாதா­ர­ணர்­களும், ஓய்­வூ­தி­யர்­களும் போடும் வங்கி முத­லீ­டு­க­ளுக்­குக் கிடைக்­கும் வட்டி, தொடர்ந்து குறை­வா­கவே இருக்­கும்.அவர்­கள், வேறு முத­லீட்டு வாய்ப்­பு­க­ளைத் தேடி நகர்ந்­து­வி­டு­வர் அல்­லது குறை­வான வட்­டி­யைப் பெற்று, வாழ்க்­கைத் தரம் பாதிக்­கப்­பட்டே இருப்­பர்.இன்­னொரு பக்­கம், குறை­வான வட்­டிக்கு ஆசைப்­பட்டு, கூடு­தல் தொகை கடன் வாங்­கு­வோர், கட­னைக் கட்­ட­மு­டி­யா­மல், திண்­டா­டு­வர். வாராக்­க­டன் பெருக இதுவே கார­ணம்.

திணறல்

ஏற்­க­னவே, வாக­னங்­களின் விலை­களும் உய­ரப் போகின்றன. இதே நிலை தொட­ரு­மா­னால், அடுத்த ஆண்டு, மருத்­துவ கட்­ட­ணம், கல்­விக் கட்­ட­ணங்­கள், இதர கட்­ட­ணங்­களும் உய­ரக்­
கூ­டும்.மத்­தி­ய­மர்­களே திண­று­கின்­ற­னர் என்­றால், ஏழை எளி­ய­வர்­கள் நிலை?உண்­மை­யில் இப்­போது, இந்­திய ரிசர்வ் வங்கி, பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இறங்­க­ வேண்­டும். இல்­லை­யெ­னில், செருப்­புக்­காக காலை வெட்­டிக்­கொள்­வது போல் ஆகி­வி­டும் என்­பதே நிபுணர்­கள் கருத்து.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 11,2020
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)