பதிவு செய்த நாள்
12 டிச2020
22:20

புதுடில்லி:ஐ.ஓ.சி., எனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், அதன், 5 கிலோ
எடைகொண்ட, சிறிய வகை சமையல் கியாஸ் சிலிண்டருக்கு, ‘சோட்டு’ என, புதிய
பெயரிட்டுள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமான 14.2 கிலோ சிலிண்டர்கள் தவிர, சிறிய அளவிலான, 5 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களையும், நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில், தற்போது இந்த சிறிய சிலிண்டருக்கு பெயர் ஒன்றை வைத்து, அதை, ஒரு பிராண்டாக உயர்த்தும் முயற்சியில், நிறுவனம் இறங்கி உள்ளது.
வழக்கமாக, ‘5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் கொடுங்கள்’ என கேட்டு தான் வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். இனி, ‘சோட்டு’ என எளிதாக பெயர் கூறி, வாங்க முடியும்.
இதனால்,இந்த சிலிண்டர் மேலும் பிரபலமாகும்.எளிதில் துாக்கிச் செல்ல வசதியான இந்த சிறிய சிலிண்டர், இருப்பிட சான்று இல்லாதவர்களுக்காக, குறிப்பாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், இள வயது ஊழியர்கள் போன்றோருக்கு பயன்படும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ‘சோட்டு’ சிலிண்டரை, வாடிக்கையாளர் பெறுவதற்கு, அவர்கள் ஏதாவது ஓர்
அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது.இருப்பிடச் சான்று தேவைப்படாது.
நாட்டிலிருக்கும், 695 மாவட்டங்களில், இந்த சிலிண்டர் சேவை கிடைக்கும். விரிவாக்க
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|