பதிவு செய்த நாள்
12 டிச2020
22:21

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்ய முடியும் என,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறியுள்ளார்.
‘ பிக்கி’ என அழைக்கப்படும், இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில், காணொலி மூலம் பங்கேற்று, அவர் மேலும் பேசியதாவது:ஓர் இந்திய அரசு ஊழியரின் மகனாக வளர்ந்த நான், நம் பொதுத்துறை நிறுவனங்களின், நிறுவன வலிமை
என்பது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன.அவற்றை சிறந்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் மட்டுமின்றி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும், திறமையான நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து சிந்திக்க வேண்டும்.
நவீனமயமாக்கலில், பொதுத்துறைக்கும் ஆதரவு அளிப்பது அவசியம் என கருதுகிறேன்.
பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து செயல்படுவதன் மூலமே, பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்ய
முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|