பதிவு செய்த நாள்
12 டிச2020
22:22

புதுடில்லி:கொரோனாவால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான துறைகளில் முக்கியமான ஒன்று, விமான போக்குவரத்து சேவை. தற்போது, இத்துறை மெல்ல மீட்சியை கண்டு வருவதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:உள்நாட்டு விமான பயணங்களுக்கான தேவை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயணியர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும், 19 சதவீதம் எனும்
அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், எண்ணிக்கை, 62 லட்சமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, பாதியளவு அதாவது,
52 சதவீதமாகவே உள்ளது.சர்வதேச விமான பயணியர்களை பொறுத்தவரை, கிட்டத்தட்ட,
83 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. நவம்பரில் மொத்தம், 3.6 லட்சம் பயணியரே சேவையை பெற்றுள்ளனர்.சர்வதேச விமான சேவையை பொறுத்தவரை,‘வந்தே பாரத்’ உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் மூலமாக மட்டுமே, விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு இக்ரா
தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|