பதிவு செய்த நாள்
12 டிச2020
22:27

புதுடில்லி"இன்போசிஸ் நிறுவனம், அதன் பங்குகளை, என்.ஒய்.எஸ்.இ., எனும், நியுயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு, எட்டுஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதாக
தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சலில் பாரேக் கூறியதாவது:
இந்திய நிறுவனமான இன்போசிஸ், நியுயார்க் பங்குச் சந்தையில், தன் பங்குகளை
பட்டியலிடும் அளவுக்கு முன்னேறி, இன்று, எட்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது.இந்த ஆண்டு, எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு ஒரு முக்கியமான ஆண்டாகும்.
இந்த ஆண்டில் வரலாற்று சவால்களை, இந்தமுத்தரப்பினரும் ஒன்றாக எதிர்கொண்டிருப்பதால், இது முக்கியமான ஆண்டாகும்.தற்போதைய பாதிப்புகளிலிருந்து, உலகம்
மீண்டுவரும் நிலையில், நிறுவனங்கள் சவால்களை தொழில்நுட்ப ரீதியாக
எதிர்கொள்வதற்கு உதவ, இன்போசிஸ் உறுதியுடன் இருக்கிறது.மேலும், வரும் 2022ம்
ஆண்டில், 25 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதாகவும் நிறுவனம் அறிவித்திருக்கிறது.இவ்வாறு அவர்கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|