பதிவு செய்த நாள்
20 டிச2020
21:12

கடன்சார் முதலீடுகளில் பத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைவான இடர் மற்றும் நிலையான பலன் ஆகிய அம்சங்களை இவை கொண்டுள்ளன. அரசு அமைப்புகளால் வெளியிடப்படும் பத்திரங்கள் உட்பட பல வகையான பத்திரங்கள் இருக்கின்றன. இந்த வகையில், ‘54 இசி’ பத்திரங்களும் முக்கியமான ஒன்றாக அமைகின்றன. சொத்து விற்பனையால் கிடைக்கும் மூலதன ஆதாயத்தை முதலீடு செய்ய உதவும் இந்த பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றிய அடிப்படையான அம்சங்களை பார்க்கலாம்.
யாருக்கு ஏற்றது?:
‘54 இசி’ பத்திரங்கள் சொத்து, நிலம் அல்லது கட்டடம் போன்வற்றை விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபம் அல்லது மூலதன ஆதாயத்தை முதலீடு செய்தால், அவற்றுக்கு வரி விலக்கு அளிப்பவை. வருமான வரிச்சட்டம் 54 இசி பிரிவின் கீழ் இந்த பலன் கிடைக்கிறது. இதன் காரணமாக, மூலதன ஆதாய விலக்கு பத்திரங்கள் என குறிப்பிடப்படுகின்றன.
பொதுத்துறை வெளியீடு:
இந்த வகை பத்திரங்களை இந்திய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய பவர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிடுகின்றன. இவற்றில், நிதியாண்டுக்கு அதிகபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ஆகும்.
லாக் இன் காலம்:
வரிச்சலுகை அளிப்பதால், இந்த பத்திரங்கள், ஐந்து ஆண்டு லாக் இன் காலம் கொண்டவை. இவற்றை மாற்றிக்கொடுப்பதும் சாத்தியம் இல்லை. இவை தற்போது ஆண்டுக்கு, 5 சதவீத பலன் அளிக்கின்றன. வட்டி விகிதம் ஆண்டு அடிப்படையில் வழங்கப்படும். வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது.
பாதுகாப்பு அம்சம்:
பொதுவாக பத்திரங்கள் பாதுகாப்பானவை. மூலதன ஆதாய விலக்கு பத்திரங்கள் அதிக ரேட்டிங் கொண்டவை மற்றும் அரசின் உறுதி கொண்டவை என்பதால், மிகவும் பாதுகாப்பானவை. இவற்றின் மூலதனம் மற்றும் வட்டி வருமானத்தில் எந்த சிக்கலும் கிடையாது.
முதலீடு வழிமுறை:
பத்திரங்களை வெளியிடும் நிறுவன இணையதளங்களில் இருந்து படிவத்தை டவுன்லோடு செய்து, கே.ஒய்.சி., ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். காசோலை, வரைவோலை உள்ளிட்ட வழிகளில் பணம் செலுத்தலாம். ஆன்லைனிலும் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|