பதிவு செய்த நாள்
20 டிச2020
21:16

அவசர தேவைக்கு அல்லாமல், வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தனிநபர் கடன் வசதியை நாடுவது அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடன் தகவல் அமைப்பை நடத்தி வரும் சி.ஆர்.ஐ.எப் இந்தியா நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில், 50 ஆயிரத்துக்கும் குறைவான கடன்கள் ஐந்து மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கிறது.
குறைந்த அளவிலான தனிநபர் கடன் அதிகரித்திருப்பதற்கு, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் முக்கிய காரணம் என்றும், இந்த நிறுவனங்கள், ‘டிஜிட்டல்’ நுட்பத்தில் அதிக பரிட்சயம் கொண்ட இளம் வயதினரை கவர்ந்து வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.தனிநபர் கடன், 18 முதல், 30 வயது கொண்டவர்கள் மத்தியில் அதிகம் நாடப்படுவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிநபர் கடன் பெற்றவர்களில் இப்பிரிவினர், 41 சதவீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன், இந்த விகிதம், 27 சதவீதமாக இருந்துள்ளது.மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மத்தியில் தனிநபர் கடன் பெறுவதும் அதிகரித்திருப்பதும், புதிய கடன்களில் இது, 69 சதவீதமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|