உற்பத்தி துறையில் தேவை அதிகரிப்புஉற்பத்தி துறையில் தேவை அதிகரிப்பு ... ‘பிரெக்சிட்’ ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பலன்? ‘பிரெக்சிட்’ ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பலன்? ...
உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தை இந்தியா பிடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2020
21:32

புது­டில்லி:உல­க­ள­வில், ஐந்­தா­வது பெரிய பொரு­ளா­தா­ர­மாக, இந்­தியா, 2025ம் ஆண்­டில்
உரு­வெ­டுக்­கும் என்­றும், 2030ம் ஆண்­டில், மூன்­றா­வது இடத்தை பிடிக்­கும் என்­றும்
ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.
பிரிட்­ட­னைச் சேர்ந்த, பொரு­ளா­தா­ரம் மற்­றும் வணிக ஆராய்ச்சி மைய­மான, சி.இ.பி.ஆர்., அதன் ஆண்டு அறிக்­கையை நேற்று வெளி­யிட்­டது.


அதில் கூறப்­பட்­டுள்­ள­ தா­வது:கடந்த, 2019ம் ஆண்­டில், இந்­தியா, பிரிட்­டனை பின்­னுக்­குத் தள்ளி, உல­கின் ஐந்­தா­வது பெரிய பொரு­ளா­தார நாடாக முன்­னே­றி­யது. ஆனால், 2020ல், ஆறா­வது இடத்­துக்கு வந்­து­விட்­டது.

7 சத­வீ­தம்

இந்­தியா பின்­தங்­கி­ய­தற்கு, கொரோனா பாதிப்­பு­களும் ஒரு முக்­கிய கார­ண­மா­கும். மேலும், இந்­திய ரூபாய் மதிப்பு சரிந்­த­தும் ஒரு கார­ண­மாக அமைந்­தது.அடுத்த ஆண்­டில், இந்­தியா,
9 சத­வீ­தம் அள­வுக்­கும், 2022ம் ஆண்­டில், 7 சத­வீ­தம் அள­வுக்­கும் வளர்ச்சி பெறும்.இந்த
வளர்ச்­சிப் பாதை­யில், 2030ம் ஆண்­டில், இந்­தியா, உல­கின் மூன்­றா­வது பெரிய
பொரு­ளா­தா­ர­மாக மாறும். 2025ல் இங்­கி­லாந்­தை­யும், 2027ல் ஜெர்­ம­னி­யை­யும், 2030ல்
ஜப்­பா­னை­யும் முந்­தும்.

பொது­வாக, ஒரு நாடு பொரு­ளா­தா­ரத்­தில் அதி­கம் முன்­னே­றிய நிலை­யில், அதன் வளர்ச்சி விகி­தம் குறை­வது இயற்­கையே. இதன்­படி, 2035ம் ஆண்­டில், இந்­தி­யா­வின் வளர்ச்சி விகி­தம், 5.8 சத­வீ­த­மாக இருக்­கும்.டாலர் அடிப்­ப­டை­யில், 2030ம் ஆண்­டின் முற்­பகுதி வரை,
இந்­தி­யாவை முந்தி, உல­கின் மூன்­றா­வது பெரிய பொரு­ளா­தா­ர­மாக ஜப்­பான் திக­ழும்.
அத்­து­டன், ஜெர்­ம­னியை நான்­காம் இடத்­தி­லி­ருந்து, ஐந்­தா­வது இடத்­திற்கு தள்ளும்.

கொரோனா பாதிப்­பு­கள் கார­ண­மாக, இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரம் அதன் வளர்ச்சி வேகத்தை தற்­போது இழந்­துள்­ளது.கடந்த ஏப்­ரல் முதல் ஜூன் மாதம் வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, மைனஸ் 23.9 சத­வீ­த­மாக சரிந்­தது.இது, அந் நாட்­டின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் கிட்­டத்­தட்ட கால் பகு­தியை அழித்து விட்டது என்­ப­தையே உணர்த்­து­கிறது.

உல­க­ள­வில் தேவை­கள் சரிந்­தது, கடு­மை­யான ஊர­டங்கு உத்­த­ர­வு­க­ளி­னால், உள்­நாட்டு தேவை­களும் பாதித்­தது ஆகி­யவை இதற்கு முக்­கிய கார­ணங்­க­ளாக அமைந்­து­விட்­டன.
கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக நீக்­கப்­பட்­ட­தால், பொரு­ளா­தா­ரத்­தின் பல பகு­தி­கள் மீண்­டும் செயல்­பாட்­டுக்கு வர முடிந்­தது. இருப்­பி­னும், நிலைமை இன்னும் தொற்று நோய் பாதிப்­புக்கு முந்­தைய நிலை­க­ளுக்­குக் கீழே தான் உள்­ளது.

அறு­வடை

இந்­தி­யா­வின் பொரு­ளா­தார மீட்­சிக்கு முக்­கிய கார­ண­மாக, விவ­சா­யத் துறை அமைந்­துள்­ளது. அறு­வடை சிறப்­பாக அமைந்­தது.சர்ச்­சை­க­ளுக்கு இடையே மேற்­கொள்­ளப்­பட்ட, உயர்
பண­ம­திப்பு நீக்­கம் மற்­றும் தற்­போ­தைய விவ­சா­யத் துறை சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள்
ஆகி­யவை நடுத்­தர மற்­றும் நீண்­ட­கா­லத்­தில் பொரு­ளா­தார நன்மை பயப்­ப­தா­கவே இருக்­கும்.இந்­தி­யா­வில் தடை­யாக இருக்­கும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­களில் அரசு அதிக முத­லீடு
செய்­வதை பொறுத்து, பொரு­ளா­தார வளர்ச்சி மேலும் வேகம் பெறும்.இவ்­வாறு
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


முத­லி­டத்­தில் சீனா

பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், சீனா, 2028ல், அமெ­ரிக்­காவை பின்­னுக்­குத் தள்ளி, உல­கின் முதல் மிகப் பெரிய பொரு­ளா­தார நாடாக உய­ரும். கொரோ­னா­வால் சீனாவை விட, அமெ­ரிக்கா
அதி­கம் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால், இதற்கு முன் கணித்­தி­ருந்­ததை விட, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தா­கவே, முதல் இடத்தை சீனா பிடித்­து­விடும் என ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)