திணறும் தொழில் நிறுவனங்கள்: தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறைதிணறும் தொழில் நிறுவனங்கள்: தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறை ... எத்தகைய நெருக்கடியையும் தாங்கும் இந்தியா குறித்து ஐக்கிய நாடுகள் சபை எத்தகைய நெருக்கடியையும் தாங்கும் இந்தியா குறித்து ஐக்கிய நாடுகள் சபை ...
நாளைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் இரு மடங்கு அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2020
21:40

புது­டில்லி:நாளைக்­குள் வரு­மான வரி கணக்­கைத் தாக்­கல் செய்­யா­விட்­டால், கடந்த ஆண்­டை­விட, இரு­மடங்கு அதி­க­மாக அபராதம் செலுத்த வேண்டி­ய­தா­கி­வி­டும்.


வரு­மான வரி கணக்­கைத் தாக்­கல் செய்­வ­தில், கடந்த ஆண்­டுக்­கும் இந்த ஆண்­டுக்­கும் இடையே முக்­கி­ய­மான வித்­தி­யாசம், உரிய காலக்­கெ­டு­வுக்­குள் தாக்­கல் செய்­யா­த­பட்­சத்­தில், விதிக்­கப்­படும் அபராதம் தான்.கடந்த ஆண்டு அபராதம், 5 ஆயி­ரம் ரூபா­யாக இருந்­தது. இது, இந்த ஆண்டு, இரு மடங்கு உயர்த்­தப்­பட்டு, 10 ஆயிரம் ரூபா­யாக அதிகரித்­துள்ளது.

இருப்­பி­னும், அபராதம் அல்­லது தாம­த­மாக தாக்கல் செய்­வ­தற்­கான கட்­ட­ணம், உங்­கள் நிகர மொத்த வரு­மா­னம் அதா­வது, தகு­தி­யான கழி­வு­கள் மற்­றும் வரி விலக்­கு­களை கோரிய
பிற­கான வரு­மா­னம், 5 லட்­சம் ரூபாயை தாண்­டி­னால் மட்­டுமே வசூ­லிக்­கப்­படும்.

உங்­கள் நிகர மொத்த வரு­மா­னம், குறிப்­பிட்ட நிதி­யாண்­டில், 5 லட்­சத்­துக்கு மிகா­மல் இருந்­தால், அப­ரா­த­மாக ஆயி­ரம் ரூபாய் மட்­டுமே விதிக்­கப்­படும்.வழக்­க­மாக, வரு­மான வரி கணக்­கைத் தாக்­கல் செய்­த­வற்கு, தனி­ந­பர்­களுக்கு, ஒவ்வோர் ஆண்­டும், ஜூலை, 31ம் தேதி கடைசி தேதி­யா­கும்.ஒரு­வேளை இதற்­குள் தாக்­கல் செய்ய முடி­யா­மல் போய்­விட்­டால், அதே ஆண்­டில், டிசம்­பர், 31ம் தேதிக்­குள், தாம­த ­மாக தாக்கல் செய்­ய­ லாம். ஆனால், தாமதக்
கட்­ட­ண­மாக, 5 ஆயி­ரம் ரூபாய் செலுத்த வேண்­டிய­திருக்­கும்.


ஒரு­வேளை, டிசம்­பர், 31ம் தேதிக்­குப் பிறகு, மார்ச், 31ம் தேதிக்கு முன்­ன­ ராக தாக்­கல் செய்­யப்­ப­டும்­பட்­சத்­தில், தாமதக் கட்­ட­ணம், 10 ஆயி­ரம் ரூபாய் வசூ­லிக்­கப்­படும்.இம்­முறை தாக்­கல் செய்­வ­தற்­கான கெடு, டிசம்­பர், 31வரை நீட்­டிக்­கப்­பட்­ட­தால், வழக்­க­மாக விதிக்­கப்­படும், 5 ஆயி­ரம் ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­பட மாட்­டாது.
ஆனால், ஜன­வரி, 1ம் தேதி முதல், மார்ச் இறு­திக்­குள் தாக்­கல் செய்­யப்­ப­டும்­பட்­சத்­தில், 10 ஆயி­ரம் ரூபாய் அப­ரா­தம் செலுத்­தி­யாக வேண்­டும்.
ஏனென்­றால், இம்­முறை தாம­த­மாக தாக்­கல் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டா­லும், தாம­தக் கட்­ட­ணத்தை வசூ­லிப்­ப­தற்­கான வரு­மான வரிச் சட்­டத்­தில், எந்த மாற்­ற­மும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
தாமதக் கட்­ட­ணம் குறித்த, வரு­மான வரி சட்­டத்­தின், 234எப் பிரி­வில், இரண்டு அடுக்கு அமைப்பு உண்டு.
அதன் படி, 5 ஆயி­ரம் ரூபாய், 10 ஆயி­ரம் ரூபாய் என, குறிப்­பிட்ட தேதி­க­ளுக்கு பிறகு கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும்.
இந்த பிரி­வில் மாற்­றம் செய்­யப்­ப­டா­த­தால்,நேர­டி­யாக, 10 ஆயி­ரம் ரூபாய் அப­ரா­தம் செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­விட்­டது.
எனவே, இரு மடங்கு அப­ரா­தத்தை தவிர்க்க, நாளைக்­குள் வரு­மான வரி படி­வத்தை தாக்­கல் செய்வது­ தான் ஒரே வழி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)