பதிவு செய்த நாள்
01 ஜன2021
21:19
புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்தில், வாகன விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது. சில
நிறுவனங்கள் சரிவைக் கண்டிருந்தாலும், பெரும்பாலும் விற்பனை நன்றாகவே
இருந்துள்ளது.
கார்கள்
நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’யின் விற்பனை, 20.2
சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மொத்தம், 1.33 லட்சம் வாகனங்களை விற்பனை
செய்திருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில், 1.24 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியிருந்தன.
இதேபோல், ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின் விற்பனையும், 33.14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிறுவனம் டிசம்பரில், 66 ஆயிரத்து, 750 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இருப்பினும், ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ 10.3 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது.
‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ விற்பனை, 14 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம், 7,487 கார்களை விற்பனை செய்துள்ளது.‘எம்.ஜி.மோட்டார்’ நிறுவனத்தின் விற்பனையும், 33
சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘யமஹா மோட்டார் இந்தியா’வின் விற்பனை, 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிராக்டர்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ‘எஸ்கார்ட்’ நிறுவனத்தின் விற்பனை, 88 சதவீதம் அதிகரித்துள்ளது. 7,733 டிராக்டர்களை இந்நிறுவனம் விற்பனை
செய்திருக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|