பதிவு செய்த நாள்
03 ஜன2021
21:47

புதிய ஆண்டின் துவக்கம், எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ள உகந்த தருணம். புத்தாண்டில், பலரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றனர். புத்தாண்டு தீர்மானங்கள் நிதி நோக்கில் அமைந்திருப்பது நல்லது. விடைபெறும், 2020ம் ஆண்டு பலவிதங்களில் சவாலானதாக அமைந்த முக்கிய நிதி பாடங்களை கற்று தந்துள்ளது. இந்நிலையில், நம் நிதி எதிர்காலத்தை மேம்படுத்தி கொள்ள, இந்த ஆண்டு மனதில் கொள்ள வேண்டிய நிதி தீர்மானங்களை பார்க்கலாம்.
கூடுதல் நிதி:
எதிர்பாராத நெருக்கடியில் கைகொடுக்க கூடிய அவசரகால நிதி கையில் இருக்க வேண்டும் என்பதை, பொதுமுடக்க சூழல் நன்றாகவே புரிய வைத்துள்ளது. பொதுவாக, ஆறு மாத கால அடிப்படை செலவுகளுக்கான தொகை, அவசரகால நிதியாக இருக்க வேண்டும். இதை இன்னும் அதிகரித்து கொள்ள வேண்டும் என, உறுதி ஏற்கலாம்.
பாதுகாப்பு அரண்:
அவசரகால நிதியை போலவே, காப்பீட்டின் அருமையையும் கொரோனா சூழல் புரிய வைத்துள்ளது. ஒவ்வொருவரும் போதிய ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பெற்றிருப்பது அவசியம். காப்பீடு நிலையை பரிசீலித்து, போதுமான காப்பீடு பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
முதலீடு தொகுப்பு:
கடந்த ஆண்டு பங்குச் சந்தை சரிவை சந்தித்து, மீண்டும் ஏறுமுகம் கண்டது. தங்கம் விலை உச்சம் தொட்டது. இந்த போக்குகளால் பலரும் தங்கள் முதலீட்டு முடிவை மாற்றிக் கொண்டனர். ஆனால், சந்தை ஏற்ற, இறக்கத்திற்குள் உள்ளாகும் போது, பதற்றம் அடையாமல் முதலீடு தொகுப்பு சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இடர் அறிவோம்:
கடந்த ஆண்டு, ‘டெப்ட் பண்டு’கள் பிரச்னைக்கு உள்ளாயின. இவை தொடர்பான கிரெடிட் ரிஸ்க் மற்றும் பணமாக்கும் ரிஸ்கை முதலீட்டாளர்கள் உணர்ந்தனர். யெஸ் பேங்க், பி.எம்.சி., வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி சிக்கலுக்கு உள்ளாயின. இவை அனைத்தும், நிதித்துறை தொடர்பாக மேலும் விழிப்புணர்வு தேவை என, உணர்த்துகின்றன.
வீட்டுக்கடன்:
ரியல் எஸ்டேட் சலுகைகள், குறைந்த வட்டி விகிதம் போன்ற காரணங்களால், வீடு வாங்க சிறந்த நேரமாக இது கருதப்படுகிறது. ஏற்கனவே கடன் பெற்றவர்கள் சாதகமான வட்டி விகிதம் பெற, பொருத்தமான வெளிப்புற கடன் விகித ஒப்பீடு முறைக்கு மாறுவது நல்லது என்பதை உணர வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|