சராசரி ரூபாய் மதிப்பு 75.50 ஆக இருக்கும்சராசரி ரூபாய் மதிப்பு 75.50 ஆக இருக்கும் ...  குளிர்கால ஆடைகள் விற்பனை அமோகம்: மக்கள் ஆர்வம்; வியாபாரிகள் மகிழ்ச்சி குளிர்கால ஆடைகள் விற்பனை அமோகம்: மக்கள் ஆர்வம்; வியாபாரிகள் மகிழ்ச்சி ...
'பவர்' தரும் ‛டேரிப் ' மாற்றம்: பாகுபாட்டால் தொழில்முனைவோர் ஏக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
12:45

க ட்டடத்தின் பாதுகாப்பு மற்றும் அழகூட்டுவதில், ‘கிரில்’ பாகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ‘கேட்’ வகைகள், படிக்கட்டுகள், ‘ஸ்டேஜ்’ என, பல்வேறு பொருட்கள் கிரில் தொழில்முனைவோரால் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கு, வார்ப்பு இரும்பு உலோகங்கள், ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ உள்ளிட்டவை முக்கிய மூலதனமாக உள்ளன.மாநிலம் முழுவதும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிரில் தயாரிப்பு தொழிற்கூடங்கள் உள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், 5,000 தொழிலகங்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கட்டட பொறியாளர்களை நம்பியே உள்ளனர்.வெளி வாடிக்கையாளர்களின் ‘ஆர்டர்’ குறைவாக உள்ளதுடன், ஆட்கள் பற்றாக்குறை, வேலையின்மை உள்ளிட்டவற்றால், கிரில் தொழில் நசிந்துவருவதாக தற்போது புலம்பல் அதிகரித்துள்ளது. இதனால், அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் கிரில் தொழிலாளர்கள் முன்வைத்து வருகின்றனர்

.‘கிரில் வெல்டிங்’ குறுந்தொழில்களுக்கு, 500 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இத்தொழிலுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மின் கட்டணத்துக்கான ‘டேரிப்’பை அரசு மாற்றியமைத்தது.இதனால், கட்டண சலுகை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் அனைத்து கிரில் தொழில் முனைவோரும் இருந்தனர். ஆனால், புதிதாக தொழிலில் கால் பதிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிப்பதாக, கிரில் தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, கிரில் தொழில் முனைவோர் கூறியதாவது:கிரில், வெல்டிங் குறுந்தொழிலுக்கு பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை, 500 யூனிட் வரை இலவசமாக கேட்டு வருகிறோம். அதற்கு மேல் பயன்படுத்துவோருக்கு, 3பி ‘டேரிப்’பில் இருந்து, 3ஏ(I) ஆக மாற்றித்தர அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.அதில், 500 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிப்பது, அரசின் கொள்கை முடிவு என, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தெரிவித்து விட்டது. அதேசமயம், ‘வெல்டிங்’ வாயிலாக தொழில் செய்பவர்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த, ‘3பி டேரிப்’, 3ஏ(I) ஆக மாற்றியமைக்கப்பட்டது நிம்மதி அளித்தது.

தற்போது, ஒரு யூனிட்டுக்கு, 11 ரூபாய் செலுத்துபவர்கள், மாற்றியமைக்கப்பட்ட டேரிப்பின் படி, 7 ரூபாய்க்குள் தான் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நசிந்து வரும் கிரில் தொழில் வளர்ச்சிக்கு இது உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால், புதிதாக தொழில் துவங்குவோருக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் எனக்கூறும் மின்வாரிய அதிகாரிகள், இதுகுறித்து முறையான அறிவிப்பு அரசாணையாக வரவில்லை என்கின்றனர். இதனால் பல ஆண்டுகளாக தொழில் செய்பவர்களுக்கு, எந்த பலனும் இல்லை என்பதால், அரசின் திட்டம் முழுமைபெறவில்லை எனலாம். விசைத்தறிக் கூடங்களுக்கு, 700 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. எங்களுக்கும், 500 யூனிட் வரை இலவசமாக வழங்கினால், தொழில் மீண்டு செழிப்படையும்.

மேலும், ‘கிரில் பேப்ரிகேசன்’ தொழிலுக்கென தனி நலவாரியம், மானியத்துடன் சொத்து பிணை இல்லாமல் குறைந்த பட்சம், 2 லட்சம் வங்கிக்கடன் என அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)