டிசம்பரில் வலுப்பெற்றது தயாரிப்பு துறை வளர்ச்சிடிசம்பரில் வலுப்பெற்றது தயாரிப்பு துறை வளர்ச்சி ...  கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நிறுத்தப்பட்ட எண்ணெய் விளம்பரம் கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நிறுத்தப்பட்ட எண்ணெய் விளம்பரம் ...
கங்குலி நடித்த அதானி நிறுவன எண்ணெய் விளம்பரம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
20:26

புதுடில்லி: இதயத்திற்கு நல்லது என்று கங்குலி நடித்த அதானி நிறுவன பார்ச்சூன் ரைஸ்பிரான் எண்ணெய் விளம்பரத்தின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

48 வயதாகும் பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலிக்கு கடந்த வாரம் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தை பரிசோதித்ததில் தமனிகளில் 70% அடைப்பு கண்டறியப்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் ஒரு தமனியில் ஸ்டன்ட் பொருத்தியுள்ளனர். அவரது அரசியல் நுழைவு குறித்த ஊகங்கள் காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் மற்றும் முன்னாள் அணியினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் இதயத்திற்கு ஆரோக்கியமானது என்று கூறி கங்குலி நடித்த பார்ச்சூன் ரைஸ் பிரான் எண்ணெய் விளம்பரம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளானது. இதனையடுத்து அந்த விளம்பர ஒளிபரப்பை தற்காலிமாக அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்று அதானி வில்மர் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ.,வால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ரைஸ்பிரான் எண்ணெய் உலகின் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஒன்றாகும். இதிலுள்ள இயற்கையான ஆன்டிஆக்சிடென்ட்டுகள் மற்றும் ஒரைசனால் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இது ஒரு சமையல் எண்ணெய் தானே தவிர, மருந்து கிடையாது. இதய பாதிப்புக்கு உணவு மற்றும் பரம்பரை என பல காரணிகள் உள்ளன.” என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Vickey.S - கடலூர்,India
06-ஜன-202111:02:59 IST Report Abuse
Vickey.S அளவான சாப்பாடு, நிறைவான தூக்கம், போதுமான உழைப்பு இல்லையேல், அனைத்து நோய்களையும் எதிர்நோக்கியே ஆகவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)