கங்குலி நடித்த அதானி நிறுவன எண்ணெய் விளம்பரம் நிறுத்தம்கங்குலி நடித்த அதானி நிறுவன எண்ணெய் விளம்பரம் நிறுத்தம் ... தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது ...
கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நிறுத்தப்பட்ட எண்ணெய் விளம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2021
01:00

புதுடில்லி:பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு, லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அதானி வில்மார் நிறுவனம், அவர் தோன்றும் பார்ச்சூன் எண்ணெய் விளம்பரங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கடந்த, 2ம் தேதியன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கோல்கட்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் அவர் வீடு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில், அவர் தோன்றிய, பார்ச்சூன் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாயின.பார்ச்சூன் எண்ணெய் இதயத்திற்கு ஆரோக்கியமானது என்று கூறுவதாக அமைந்திருக்கும் அந்த விளம்பரத்தில், கங்குலி நடித்திருந்தார். இதுவே, சமூக ஊடகங்களின் விமர்சனத்துக்கு காரணமாக அமைந்தது.


பார்ச்சூன் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய்க்கான விளம்பர துாதராக, கடந்த ஆண்டு ஜனவரியில், கங்குலி நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவரை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வந்தன.தற்போது விளம்பரங்கள் நிறுத்தப் பட்ட நிலையில், அதற்கு ஆதரவாகவும், நிறுவனத்தின் நடவடிக்கையை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)