பதிவு செய்த நாள்
07 ஜன2021
22:10
புதுடில்லி:இந்திய பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில், மைனஸ், 7.7 சதவீதமாக இருக்கும் என, அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு
நிதியாண்டில் மைனஸ், 7.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி பாதிப்பு
இது, முந்தைய நிதியாண்டில், 4.2 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது.மத்திய புள்ளிவிபர
அலுவலகம் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில், விவசாயம் தவிர அனைத்து
துறைகளிலும் வளர்ச்சி பாதிப்பு இருக்கும் என தெரிவித்து உள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டில், தயாரிப்பு துறை வளர்ச்சி, மைனஸ், 9.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் சுரங்கம், வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து, தொலைதொடர்பு ஆகிய சேவை துறைகள் வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க சரிவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பொருளாதாரம்
அதேசமயம், விவசாயத் துறை, 3.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்து உள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மைனஸ், 23.9 சதவீதமாகவும்; இரண்டாவது காலாண்டில், மைனஸ், 7.5 சதவீதமாகவும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|