பதிவு செய்த நாள்
08 ஜன2021
21:46

புதுடில்லி:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், அதன் வாகனங்களுக்கான விலையை, 1.9 சதவீதம் உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் அதன் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான விலையை, 1.9 சதவீதம் உயர்த்தி இருப்பதாகவும்; இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.இதை அடுத்து, வாகனங்களின் விலை, 4,500 ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாய் வரை, வாகனங்களை பொறுத்து அதிகரிக்கும் என தெரிகிறது.
கடந்த பல மாதங்களாக, மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, விலை அதிகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என, மகிந்திரா அண்டு மகிந்திரா தெரிவித்துள்ளது.கடந்த மாதமே, வாகனங்களின் விலையை ஜனவரியிலிருந்து அதிகரிக்க இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், நேற்று விலை உயர்வு குறித்து அறிவித்துஉள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|