பதிவு செய்த நாள்
08 ஜன2021
21:48

பெங்களூரு:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் குறைந்து, ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் இருக்கும் என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கணித்துள்ளது.
இது குறித்து மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் உள்ள, 45 பொருளாதார நிபுணர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 5.28 சதவீதமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இது, 6.93 சதவீதமாக இருந்தது.சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியில் இலக்கு, 4 சதவீதமாகும். இதில் கூடுதலாகவோ; குறைவாகவோ, 2 சதவீதம் இருக்கலாம்.
அதாவது, 2 சதவீதத்திலிருந்து, 6 சதவீதம் வரை இருக்கலாம். டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் குறைவதற்கு, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை குறைந்தது முக்கிய காரணமாக அமையும்.கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, எட்டு மாதங்களாக, சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டியே இருந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில், இலக்குக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|