பதிவு செய்த நாள்
08 ஜன2021
21:51

புதுடில்லி:‘டெஸ்லா’ மற்றும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான, எலான் மஸ்க், உலகின் நம்பர் ஒன் பணக்காரராக ஆகியுள்ளார்.
கடந்த, 2017 அக்டோபரிலிருந்து முதலிடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனர், ஜெப் பெசோசை, பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பிடித்துள்ளார், எலான் மஸ்க் கடந்த வியாழனன்று, ‘டெஸ்லா’ நிறுவனத்தின் பங்கு விலை, 4.8 சதவீதம் அதிகரித்ததை அடுத்து, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, 188.5 பில்லியன் டாலராக, அதாவது, இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 13.76 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
இது, ஜெப் பெசோசின் சொத்து மதிப்பை விட, 10 ஆயிரத்து, 950 கோடி ரூபாய் அதிகமாகும். இதையடுத்து, எலான் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்து உள்ளதாக, ‘புளூம்பெர்க்’ தெரிவித்து உள்ளது.
இன்று, இந்த உலகத்தின் மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்துவிட்டாலும், ஒரு காலத்தில், ஒருநாள் உணவுக்கு, ஒரே ஒரு டாலர் மட்டுமே செலவழிக்க கூடிய நிலையில் இருந்தார் என்பது வரலாறு. அவருடைய கல்லுாரிக் காலம் வரை, கஷ்டம் அவர் கூடவே பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப் பெரிய பணக்காரராகி இருக்கிறார் என்ற செய்தி வந்ததும், இது குறித்து, டுவீட் செய்த எலான் மஸ்க், ‘விசித்திரம்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|